
“பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங் குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். “என்று குன்னூரில் நடந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்ட விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.நீலகிரி மாவட்டம் குன்னூரில், பொங்கலுக்காக இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களை...