.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 29 November 2013

குஜராத்தில் போலீசார் கண்காணித்த இளம்பெண்ணை மோடி சந்தித்த படங்கள் வெளியானதால் பரபரப்பு!

 

குஜராத்தில் அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்படி, கண்காணிக்கப்பட்டதாக கூறப்படும் இளம்பெண், முதல்வர் மோடியை சந்தித்த படங்கள் இணையதளத்தில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் முதல்வர் மோடிக்கு நெருக்கமான அமைச்சர் அமித் ஷா. இவர், போலீஸ் அதிகாரி ஜிங்காலை தொடர்பு கொண்டு இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சரும் அதிகாரியும் பேசிய தொலைபேசி உரையாடல்களும் வெளியானது.

இதை அந்த பெண்ணின் தந்தை மறுத்தார். இந்நிலையில், போலீஸ் அதிகாரி சிங்கால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அமித் ஷாவை மட்டுமன்றி 2005ம் ஆண்டு முதல் நரேந்திர மோடியுடனும் அந்த பெண்ணுக்கு அறிமுகம் உள்ளதாக புலனாய்வு இணையதளம் குலைல் அம்பலப்படுத்தி உள்ளது.

 கடந்த 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த விழாவின் போது முதல்வர் மோடியை சர்ச்சைக்குரிய அந்த பெண் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படங்கள் அந்த இணையதளத்தில்  வெளியாகி உள்ளன.  பெண்ணின் பெயர் மாதுரி என்று குறிப்பிடப்பட்டு, முகம் மறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த புகைப்படங்களில் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதீப் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மலைத்தோட்ட திட்ட விவகாரம் தொடர்பாக, அப்போது நான் கலெக்டராக இருந்த போது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணுடன் மோடி இமெயில் தகவல்களை தொடர்ந்து பரிமாறி வந்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார்.


அந்த பெண்ணை போலீசார் கண்காணித்தது தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கடந்த வாரம் பிரதீப் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சர்ச்சைகளுக்கு மத்தியில் மோடியை பெண் சந்தித்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியானதால் குஜராத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top