
உபநிடதங்கள் வேத காலத்திற்கு பிறகு உபநிடதங்கள் தோன்றின. இவை வேதங்களின் கிளை நூல்கள் எனவும் கூறப்படுகிறது. உபநிடதங்கள் பண்டைய இந்தியாவின் தத்துவ நூல்கள் மேலும் இவை இந்துக்களின் ஆதார நூலாகவும் விளங்குகிறது. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை. நான்கு வேதங்களுக்கும் சாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன. எல்லா கிளை நூல்களும் தற்காலத்தில் காணப்படவில்லை. ஒவ்வொரு வேதத்தின் முடிவிலும் முடிவிலும்...