‘ரகளபுரம்‘ படத்தில் கருணாசுடன் சேர்ந்து மற்றொரு ஹீரோவாக நடித்திருப்பவர் பரத் ரெட்டி. அவர் கூறும்போது, ‘தமிழில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தேன். இந்த படத்தை பார்த்துதான் ‘ரகளபுரம்‘ படத்தில் கருணாஸ் எனக்கு போலீஸ் அதிகாரியாக நடிக்க வாய்ப்பு தந்தார்.

அடுத்து சுந்தரபாண்டியன் இயக்கும் ‘இது கதிர்வேலன் காதல்‘, ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் தயாரிக்கும் படம், ‘சேட்டை‘ இயக்குனர் கண்ணன் இயக்கும் படங்களில் நடிக்கிறேன். ஐதராபாத்தில் இதய அறுவை சிகிச்சை டாக்டராக பணிபுரிந்தாலும் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. குணசித்திரம் உள்ளிட்ட வேடங்களே போதும். நடிப்புக்காக டாக்டர் பணியை விடமாட்டேன்’ என்றார்.