
சூரியனில் அவ்வப்போது ஏற்படும் தீச்சுவாலை சீற்றங்களை நாஸாவின் விண்வெளி ஓடம் எடுத்த துல்லியமான சில புகைப்படங்களின் தொகுப்பு இது. மே 12 மற்றும் 14ஆம் தேதிக்கு இடைப்பட்ட மூன்று நாள் காலகட்டத்தில் சூரியனில் நான்கு உக்கிரமான தீச்சுவாலை சீற்றங்கள் காணப்பட்டன. இந்த வருடத்தில் சூரியனில் அவதானிக்கப்படும் மிக மோசமான தீச்சுவாலை சீற்றங்களாக இவை கருதப்படுகின்றன. இவ்வாறாக தீப்பிழம்பை பீய்ச்சி அடிக்கும் சீற்றம் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மிக அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்த சீற்றத்தால் சூரியத் துகள்கள் விண்வெளியில் நெடுந்தூரத்துக்கு வீசியெறியப்படுகிறது. இந்தப் படத்தில் வீச்சு எந்த அளவுக்கு பரவுகிறது என்பதைக் காட்டுவதற்காக சூரியனின் விட்டம்...