.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 7 September 2013

இஸ்ரோவில் கூட ஊழல்! : சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தகவல்!!


உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்தியாவால் லண்டன் ஒலிம்பிக்கில் ஜொலிக்க முடியவில்லை , உலக பதக்க பட்டியலில் 41வது இடத்தை பிடிக்கதான் முடிந்தது. இந்த விரக்க்த்தியினால் தானோ எண்ணவோ. இந்தியாவை எப்படியும் உலக ஊழல் பட்டியளிலாவது முன்னுக்கு கொண்டு வந்தே தீருவது என நம்மை ஆள்பவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகவே தோன்றுகிறது.

இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. நடநதவை இவை மட்டுமே அல்ல. இவை மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவை. இதில் புழ்ங்கிய மொத்தத் தொகை கிட்டத்தட்ட ரூபாய். 910,603,234,300,000 இது அமெரிக்க டாலரில் 20.23 டிரில்லியன். இத்தனை பெரிய தொகையை வைத்து, இந்தியா ஓர் இரவில் மிகப்பெரும் வல்லரசாக மாற்றிவிடமுடியும், அனைத்து சமூகப் பிரச்சினைகளையும் முக்கியமாக வறுமையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் நிரந்தரமாக ஒழித்துவிடலாம் என்று சொல்லி வந்த நிலையில் சாதாரண மக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லாத விண்வெளி ஆராய்ச்சி துறையான இஸ்ரோவிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக வெளியான செய்தியால் தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. .

sep 7 scams detail

 


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான விண்வெளி சுற்றுப்பாதையில் பன்னாட்டு தனியார் நிறுவன செயற்கைகோளை நிலைநிறுத்த இஸ்ரோ அனுமதி வழகங்கியதாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இண்டெல் சட் என்ற இந்த செய்றகைகோளை இந்தியாவின் 55இ என்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த பெரிய அளவில் பணம் கைமாறி இருக்க வாய்ப்பு உள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் செயற்கைகோள் தொலைதொடர்பு கொள்கையை மீறிய செயல் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச தொலைதொடர்பு யூனியனின் ரேடியோ ஒழுங்குமுறை விதிகளும் மீறப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமீறலுக்கு பின்னால் ஊழல் நடந்துள்ளதாக கருதுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

2003ஆம் ஆண்டு பிப்ரவரி ஒர் ஆண்டு காலத்திற்கு இண்டெல் சட்டிடம் 16 டிரான்ஸ்பாண்டர்களை கூத்தகைக்கு எடுத்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தணிக்கையில் தெரியவந்துள்ளதாக சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது. 


CAG raps ISRO for allowing foreign satellites in Indian orbit slot

********************************************************* 

The Comptroller and Auditor General (CAG) Friday rapped space agency ISRO for allowing a foreign private satellite service provider to park its satellite in an orbit slot meant for Indian satelites in violation of nation’s SATCOM policy and extending “undue benefit” to a foreign firm. 

TABLET BUYING GUIDE : 2013!



E Book உங்களுக்காக....

அனைவருக்கும் பயன்படும் என்ற நோக்கில்  Make Of Use இணைய தளத்தால் வெளியிடப்பட்ட "TABLET BUYING GUIDE" என்ற மின் புத்தகம்.


tabletbuying 176x250 MakeUseOf Tablet Buying Guide: Summer 2013

So what makes an iPad worth all the hype? What’s Android? Windows 8? From Samsung to Surface, the list of tablet terms goes on and on. There are many manufacturers making tablets of all shapes and sizes running a great variety of software, and how do you know which one is right for you? This guide will put in simple language the facts you need to know about all the kinds of tablets out there, and based on some key facts which one you should ultimately purchase.

 
 

பல் ஏன் துலக்க வேண்டும்? எப்படி துலக்குவது??


நம் அன்றாட வாழ்வில் பல துலக்குதல் ஓர் அத்தியாவசியமான அங்கமாகிவிட்ட காலமிது. காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. துலக்கி முடிக்கும் வரை நாம் வாயில் எச்சில் கூட்டி விழுங்கவும் தோன்றாது, துப்பவும் தோன்றாது படும் அவதி ஓர் தனி விதம். துலக்கிய பின் தோன்றும் புத்துணர்வும், தூய்மை உணர்வும் ஓர் தனி இன்பமே. எனவே பல் துலக்குதல் காலைக் கடன்களில் ஒன்றாகவே கருதப்பட்டு, அனைவராலும் சாதி, மத பேதமின்றி, அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.பல் துலக்குதல் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், மற்றும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்க வல்லது.

sep 5 - tooth brush
 
ஏன் பல் துலக்க வேண்டும்?

பல் துலக்குதல் என்பது நம் வாயிலும் பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். இந்த அழுக்கை ஆங்கிலத்தில் plaque என்றும் tartar என்றும் கூறுவர். இந்த அழுக்கானது, பல் ஈறுகளிலிருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்களும் கலந்த ஓர் கலவையே. பல் துலக்கிய இரண்டு அல்லது மூன்று மணிகளுக்குள்ளே இந்த அழுக்கு (plaque) பல் ஈறுகளில் படியத் துவங்கும். இவைகள் பல்லை மட்டுமல்லாமல் பல் ஈறுகளுக்கும் பாதிப்புகளை அதிகமாக்குவதோடு, பற்களை இழப்பதற்கும்
காரணமாகிவிடுகிறது.எனவே பற்களை இருமுறை துலக்குதலும், உணவு உண்டபின் ஒவ்வொரு முறையும் மிக நன்றாக வாய் கொப்பளித்தலும் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும். இதற்கு தண்ணீரையோ, கொப்பளிக்கும் திரவத்தையோ உபயோகிக்கலாம்.

எப்படி பல்லை துலக்குவது


பல் துலக்குவதற்கு ஒரே ஒரு சரியான முறைதான் உள்ளது என்ற நிலை இல்லை. அந்நுட்பம் ஒவ்வொருவரின் வாய், தாடையில் பற்கள் அமைந்துள்ள தன்மையினைப் பொருத்து மாறுபடும். பரவலாக, பல் மருத்துவர் பலராலும் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கப் படும் அழுக்கினை (plaque) நீக்கும் வழியினை இங்கு பார்ப்போம்.

பெரியவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறை;


பல் துலக்கியின் (plaque) குச்சுகள் 45 டிகிரி கோணத்தில் ஈறுகளின் மேல் சாய்த்துப் பிடித்து, ஒவ்வொரு முறையும் மூன்று பற்களின் மேல், முன்னும், பின்னும் நகர்த்தி, சிறிது அதிர்வுடன் கூடிய சுழற்றும் முறையிலும் தேய்க்க வேண்டும். இம் முறையை கடைவாய் பற்களில் துவக்கி முன் பற்கள் வரை, மூன்று, மூன்று பற்களாக முன்னேற வேண்டும். மேல் தாடையின் வலது, இடது, உள், வெளி பக்கங்களிலும், அதே போல் கீழ் தாடையிலும் வலது, இடது, உள் வெளி பக்கங்களிலும் தேய்க்க வேண்டும்.

இச்சுழற்சியினை சுமார் 15 முதல் 20 முறைகள் ஒவ்வொர் இடத்திலும் மேற்கொள்ள வேண்டும்.

முன் பற்களுக்கு மட்டும் பல் துலக்கியை செங்குத்தாக பிடித்து 45 டிகிரி கோணத்தில் மேலும் கீழும் நகர்த்தி, உள்ளும் வெளியும் தேய்த்து விட வேண்டும்.

கடைவாய் பற்களின், மெல்லும் மற்றும் கடிக்கும் பகுதிகளில் பல்துலக்கியின் குச்சுகளால் நன்றாக அழுத்திப் பிடித்து முன்னும் பின்னுமாக தேய்த்து விட வேண்டும். பற்களைத்தான் செம்மையாக தேய்த்து முடித்தாயிற்றே என்று முடித்து விடாமல் மறவாது நமது நாக்கின் புற பகுதிகளில் பல் துலக்கியால் முன்னும் பின்னும் அசைத்து நகர்த்தி தேய்த்தால், வாய் துர்நாற்றம் வீசக் காரணமான கிருமிகளை அகற்றி விட முடியும்.

சிறியவர்களுக்கான முறை

சிறார்களை பல் முற்றும் ஈறுகளில் பல் துலக்கியின் குச்சுகளால் வட்ட வடிவில் சுழற்சி முறையில் தேய்க்க அறிவுறுத்த வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா, பச்சிளம், பல் முளைக்காத பாலகர்களுக்கும் பக்குவமாக ஈறுகளை விரல்களால் தேய்த்து விடுதல் சாலச் சிறந்த முறை. குழந்தைகளை பாசப் பரிவுடன் ஒரு கையில் ஏந்திக்கொண்டு மறு கையில், ஆள்காட்டி விரலில் ஈர துணி சுற்றி ஈறுகளில் இதமாக முழுதாக தடவி துடைத்து விட வேண்டும்.

எத்தகைய பல்துலக்கிகளை உபயோகித்தல் நல்லது.
மிருதுவான, கூர்முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன் கூடிய பல் துலக்கியால் பல் துலக்குவது நல்லது. கூர் முனை குச்சுகளை தவிர்க்க வேண்டும். கடினமான மற்றும் விரைப்பான குச்சுகள் கொண்ட பல் துலக்கிகள் பல்லின் எனாமல் மற்றும் ஈறுகளை சேதப்படுத்தி விடக்கூடும். அவைகளை தவிர்த்தல் நலமே.

எவ்வித பற்பசைகளை உபயோகிக்கலாம்


பற்சிதைவை தடுக்கும் தன்மை வாய்ந்த புளூரைடு கொண்ட பற்பசைகளை உபயோகித்தல் நல்லது. சிறுவர்களுக்கு ஒரு பட்டாணியின் அளவிலான பற்பசையினை உபயோகித்தலே போதுமானது. ஏனெனில் சில சிறுவர்கள் அதிக பற்பசை வைத்தால் துலக்கும்போது விழுங்கிவிட வாய்ப்புண்டு . இது அவர்களுக்கு உடலில் அதிக அளவிலான புளூரைடு நிறைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும்.

தவறான பல்துலக்கும் நுட்பம் தரும் பாதிப்புகள் என்ன

உடலிலேயே மிக மிக கடினமானது, கெட்டியானது எதுவென்றால் அது பல்லின் வெளிப்புறமுள்ள எனாமல்தான். இது எலும்பை விட உறுதியானது. தவறான, முறையற்ற வகையில் பல் துலக்கும் பழக்கமான இந்த உறுதியான எனாமலையும் பாதித்து, செயலிழக்கச் செய்து, பற்சிதைவை உருவாக்கிவிடக் கூடும். அத்தோடு ஈறுகளை சிதைத்து, இரத்தம் வழியவிட்டு, புண்ணாக்கி பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

எப்பொழுதும் பதமாக, மெதுவாக பல் துலக்கிகளை உபயோகிப்பீர். மூன்று மாதத்திற்கு ஒருமுறை பல் துலக்கிகளை மாற்றிவிடுவது அவசியம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..! – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பிரமாண்டமான வளர்ச்சியை (சம்பளத்தில் மட்டும்) பெற்றவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் வெளிவந்திருக்கிற படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’… முழுப்படமும் காமெடியை மையப்படுத்தி எடுக்க வேண்டும் என இயக்குனர் பொன்ராம் முயற்சித்திருக்கிறார்… பாவம் பல இடங்களில் காமெடிக்கு பதில் ‘நற…நற…’ கடிதான் மிஞ்சுகிறது.


கதை என பார்த்தால் பெருசாக எதுவும் இல்லை. சிவகார்த்தியும், சத்யராஜூம் கிராமத்தில் எதிர் எதிர் பார்ட்டிகள்… சத்யராஜ் மகள் மீது சிவகார்த்திக்கு காதல்… இந்த காதல் கைகூடியதா… சத்யராஜ் வில்லத்தனம் ஏதாவது செய்தாரா? என்பதுதான் கதை.

sep 7 Varutha-Padatha-Valibar

 

படத்தின் தலைப்பை போலவே எந்த காட்சிக்கும்… பாடலுக்கும்… கதைக்கும்… ஏன் படத்துக்குமே இயக்குனரும், நடிகர்களும் வருத்தப்படாமல் இஷ்டம்போல எடுத்திருக்கிறார்கள்… படம் பார்க்கிற நமக்குத்தான் வருத்தமோ… வருத்தம்… இருக்காதா எதுவுமே புரியமாம போனா…
சத்யராஜ் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மிகவும் மாறுபட்டு மிகவும் கீழே இறங்கி வந்து போயிருக்கிறார்… அவரின் வழக்கமான நடிப்பு கூடஇந்த படத்தில் இல்லை.

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் இரு பெரும் தலைவர்கள் மோதிக் கொண்ட விஷயத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பேரில் நக்கல் செய்திருப்பது இயக்குனரின் குசும்புத்தனத்துக்கு ஒரு உதாரணம்…(எந்த கட்சின்னு நாங்க சொல்ல மாட்டோம்மில்ல)
ஊருக்கே தெரிந்த சத்யராஜின் மகள்தான் ஹீரோயின் என்பது சிவகார்த்திக்கு தெரிந்த பிறகும்… ‘ஊதா கலரு ரிப்பன்… யாரு உனக்கு அப்பன்’ என பாடலிலும் லாஜிக் மீறியிருக்கிறார்கள்..(சினிமாவுல ஏதுப்பா லாஜிக்னு யோசிக்கிறது தெரியுது…)

சிவகார்த்தியை மட்டுமே மையப்படுத்தி படம் ஓடுகிறது… இயக்குனர் ராஜேஷ் வசனம் பெருசாக எடுபடவில்லை… இமானின் இசையில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கிறது… பாலசுப்பிரமணியின் ஒளிப்பதிவு மட்டும் ஓகே ரகம்… கிளைமாக்ஸ் முடியும் என பார்த்தால் நீ…..ண்டு கொண்டே போகிறது… மொத்தத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் பார்க்கிற ரசிகர்களை கூட சேர்த்துக் கொள்ளாது என்பதுதான் வெளியே தெரியாத உண்மை..!
படத்துல கதைன்னு எதுவும் இல்லாம போனாலும் போட்டிக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகாதது இந்த பட வசூலுக்கு வாய்ப்பா அமையலாம்..!

‘அம்மா’ மினரல் குடிநீர் 15–ந்தேதி அறிமுகம்!


மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முக்கியமானது குடிநீர். பல இடங்களில் குடிநீர் சுத்தமாக இல்லாத காரணத்தால் ‘மினரல் வாட்டர்’ வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து விட்டது.கடைகளில் 1 லிட்டர் மினரல் வாட்டர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட் மினரல் வாட்டர் ரூ.1 முதல் 1.50 வரை புழக்கத்தில் உள்ளது.
ரெயில்களில் 1 லிட்டர் மினரல் வாட்டர் (ரெயில் நீர்) ரூ.15–க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மினரல் வாட்டர் விலை அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் தரமான குடிநீர் வழங்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டார்.இதையொட்டி ஏழை எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ‘அம்மா மினரல் வாட்டர்’ உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.


IND1674A.JPG

 


இதை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தினமும் 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் ‘அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 1 லிட்டர் பாட்டில் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும் இவை அரசு பஸ்களிலும், சென்னையில் உள்ள பஸ் நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள புறநகர் பஸ் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த ‘அம்மா மினரல் வாட்டர்’ உற்பத்தி நிலையம் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான வருகிற 15–ந்தேதி துவங்கப்பட்டு அன்றைய தினமே மினரல் வாட்டர் விற்பனையும் நடை முறைக்கு வரும் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதையொட்டி கும்மிடிப்பூண்டியில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மினரல் வாட்டர் தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் சாலை போக்குவரத்து நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

வருகிற 15–ந்தேதி முதல்– அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மினரல் வாட்டர் விற்பனையை அறிமுகம் செய்கிறார்.எனவே 15–ந்தேதியில் இருந்து பஸ் நிலையங்கள், ஓட்டல்கள், அரசு விரைவு பஸ்கள் நீண்ட தூர பஸ்களில் ‘அம்மா மினரல் வாட்டர்’ 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். இந்த திட்டம் பஸ் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.அடுத்த கட்டமாக மேலும் 9 ஊர்களில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் சாலை போக்குவரத்து நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top