
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா நேற்று பொறுப்பேற்றார். நாட்டின் மிகப் பெரிய அரசுடமை வங்கியின் முதலாவரது பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வங்கியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு 57 வயதான அருந்ததி, எஸ்பிஐயின் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிதித்துறை தலைவராக பதவி வகித்தார். இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் சவுத்ரி கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சாரியா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வங்கியின் 207 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.57 வயதான அருந்ததி...