.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 8 October 2013

எஸ் பி ஐ-யின் முதல் பெண் தலைவரானார் அருந்ததி பட்டாச்சார்யா !


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா நேற்று பொறுப்பேற்றார். நாட்டின் மிகப் பெரிய அரசுடமை வங்கியின் முதலாவரது பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வங்கியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு 57 வயதான அருந்ததி, எஸ்பிஐயின் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிதித்துறை தலைவராக பதவி வகித்தார்.



8 - lady_ARUNDHATI_

 



இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் சவுத்ரி கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சாரியா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வங்கியின் 207 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.


57 வயதான அருந்ததி பட்டாச்சாரியா, பணிமூப்பு அடிப்படையில் தலைவர் பதவிக்கு வரும் பட்டியலில் முன்னிலையில் இருந்தார். நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அலுவலராக பதவி வகித்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.பட்டாச்சாரியாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதால், வங்கியின் 4 நிர்வாக இயக்குனர் பதவிகளில் ஒன்று காலியாக உள்ளது. 



பொதுத்துறை வங்கிகளின் பெண் தலைவர்கள் வரிசையில் அலகாபாத் வங்கியின் தலைவர் சுபலட்சுமி பன்சே, பாங்க் ஆப் இந்தியா தலைவர் வி.ஆர். ஐயர் ஆகியோருடன் இப்போது அருந்ததி பட்டாச்சாரியா இணைந்துள்ளார். இதேபோல் தனியார் வங்கிகளில் சண்டா கோச்சார் (ஐசிஐசிஐ), சிக்லா சர்மா (ஆக்சிஸ்), நைனா லால் கித்வாய் (எச்.எஸ்.பி.சி.) ஆகியோரும் தலைவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Arundhati Bhattacharya becomes first woman to head SBI

*************************************


 The government on Monday cleared the elevation of Arundhati Bhattacharya as the chairperson of the State Bank of IndiaBSE -1.19 % – the first woman chief of the country’s largest lender – succeeding Pratip Chaudhuri who retired on September 30.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top