
தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு வரிசையில் ஸ்வீட்டும் தவிர்க்க முடியாத அயிட்டம். தீபாவளிக்காக சென்னையில் உள்ள எல்லா ஸ்வீட் ஸ்டால்களிலும் பலதரப்பட்ட புதுவகையான ஸ்வீட்கள் தயாராகி வருகின்றன.இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு துறை அதிரடி ரெய்டு நடத்தியது. சென்னையில் உள்ள அனைத்து ஸ்வீட் ஸ்டால்களிலும் ஆய்வு நடத்தியதில், பெரும்பாலான கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் தரமற்றவையாக இருப்பதாக பீதி கிளம்பியுள்ளது. ஸ்வீட் தயாரிக்கப்படும் இடம், அவற்றில் கலக்கப்படும் பொருட்கள் ஆகியவை தரமில்லாதவை என கூறப்படுகிறது.மேலும், எப்போது ஸ்வீட் தயாரித்தார்கள், அவை எத்தனை நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்கிற தகவலையும் தயாரிப்பவர்கள் குறிப்பிடுவதில்லை. இதனால்,...