
கண்ணுக்கு மை அழகு என்றது அந்தக் காலம். இன்று கண்ணழகுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் வந்தாச்சு. கண்களுக்கான மேக்கப்பிலும் எக்கச்சக்க புதுமைகள்! ஐ மேக்கப் என்னவெல்லாம் லேட்டஸ்ட்? எந்த சந்தர்ப்பத்துக்கு எப்படி ஐ மேக்கப் செய்ய வேண்டும்? விளக்கமாகப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் ஹசீனா சையத்.கண்கள் தான் மனசைப் பிரதிபலிக்கிற கண்ணாடி. நம்ம மனசுக்குள்ள சந்தோஷமோ, சோகமோ, எது இருந்தாலும், அது கண்கள்ல தான் தெரியும். என்னதான் பிரமாதமா மேக்கப் போட்டாலும் கண்களுக்கு மேக்கப் இல்லைனா அந்த அழகு கொஞ்சங்கூட எடுபடாது. வெறுமனே மையும் ஐ லைனரும் மட்டுமே கண்களுக்கு போதும்னு நினைக்குறதில்லை இன்றைய இளம் பெண்கள். சாதாரண காஜல்னு ஆரம்பிச்சு, மஸ்காரா வரைக்கும் ...