உலகம் முழுவதும் 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசி, செல்போன் பேச்சுகளை அமெரிக்க உளவுத்துறை ஒட்டு கேட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதற்கான ஆதாரத்தை, அமெரிக்க உளவுத்துறை முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டென் சமீபத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்போன் பேச்சுகளையும் அமெரிக்க உளவுத்துறை ஒட்டு கேட்டிருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி பிரதமர் அலுவலக தகவல் தொடர்பாளரிடம் கேட்டபோது, ‘‘பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் செல்போன் வைத்து கொள்ளவில்லை.
அதேபோல், தனியாக இ& மெயில் முகவரியும் வைத்து கொள்ளவில்லை. அவருடைய அலுவலகம் சார்பில்தான் இ-மெயில் உள்ளது. இதனால், பிரதமரின் செல்போன் பேச்சுகளை ஒட்டு கேட்பது, இ&மெயில் தகவல்களை திருடுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று பதிலளித்தார்.