.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 10 November 2013

டெக்னாலஜி வில்லனா? நண்பனா?

ஹன்ஸா காஷ்யப் வழக்கறிஞர். அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் முதுகலையும், சைபர் லா சட்டமும், காபிரைட் தொடர்பான சட்டத்தில் ஐக்கிய நாடுகள் அகாடமியின் டிப்ளமோவும் பெற்றவர். இசையில் முதுகலை எம்.ஏ., எம்.ஃபில் பட்டதாரியான இவர் ஆன்லைன் இசைப் பகிர்வு பற்றி ஆராய்ந்து வருகிறார்.

- எஸ்.ஹன்ஸா காஷ்யப்

ஆன்லைன் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பல செக்யூரிடி சாஃப்ட்வேர்கள், அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. ஆனால், வெறும் புத்திசாலித்தனத்தை மட்டும் வைத்து எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப்பட முடியும், நம்மை எப்படியெல்லாம் காத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த விரும்பியதே இந்தத் தகவல் கைடின் நோக்கம்.

மொபைல் ஃபோன்:

* நான் ஒரு முறை வெளியூருக்குக் கிளம்பினேன். போய்ச் சேர்ந்ததும்தான் தெரிந்தது என் மொபைலை மறந்து விட்டுக் கிளம்பியிருக்கிறேன். என் கணவருக்கு என் மொபைல் எண்ணிலிருந்தே எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். (எப்படி முடியும் என உங்கள் மகனை/மகளைக் கேளுங்கள். சொல்வார்கள்.) கணவர் குழம்பிவிட்டார். உங்களைப் போலவே. (பார்க்க பெட்டிச் செய்தி)

பெட்டிச் செய்தி:

அப்படி அனுப்ப நிறைய சைட்கள் உள்ளன. என் மொபைல் எண்ணை, அந்த சைட்-இல் பதிந்து வைத்தால், அவர்கள் ஒரு பாஸ்வோர்டை என் எண்ணுக்கு அனுப்புவார்கள். எங்கிருந்தாலும், இன்டர்நெட் மூலம், அந்த பாஸ்வோர்டை உபயோகித்து, என் எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும்.

ஆனால், என் பாஸ்வோர்ட் தெரிந்த மற்றொரு நபரும், என் எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும் அல்லவா?

உங்கள் மகள், கல்லூரியில் படிக்கிறாள். ஹாஸ்டல் அறைத்தோழி, நம் மகள் மொபைலில் இருந்து பாஸ்வோர்டைத் திருடியோ அல்லது மகளின் எண்ணை அந்த சைட்-ல் பதிந்துவிட்டு, ‘ஒரு நிமிஷம் உன் மொபைலைத் தாடி’ என சொல்லி, அந்த நிமிடம், அவர்கள் அனுப்பும் பாஸ்வோர்டைக் குறித்துக் கொண்டு, அதை மொபைலில் இருந்து அழித்துவிட்டு, உங்கள் மகளின் எண்ணிலிருந்து யாருக்கு வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்ப முடியுமே. இதுபோன்ற சைட்களின் வழியாக வரும் செய்திகளை நாம் புறக்கணிக்கலாம் என்றால், எந்த செய்தி அப்படி வந்தது என அறிய முடியாது. அந்த செய்திகளும், நம் மொபைல் மெசேஜ் சென்டர் வழியாகவே வரும். ஏன்?… உங்கள் எண்ணிலிருந்து கூட உங்கள் மகளுக்கு செய்தி அனுப்ப முடியும். அல்லவா?

* அதற்கும் மேலாக, பிரபல பத்திரிகையின் மொபைல் எண் எனக்குத் தெரியும். பத்திரிகையிலிருந்து, தோழியின் எண்ணுக்கு வாழ்த்துச் செய்தியுடன், கால் வந்தது போல காட்ட முடியும். அவளை ஏமாற்றவும் முடியும். அதற்கும் டெக்னாலஜி துணை போகிறது.

இப்போது சொல்லுங்கள்….

இதற்கு என்ன செய்வது? இதுபோன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட முடியும்தான். ஆனால் அதற்கு முன்…?

மொபைல் என்பது உங்கள் உள்ளாடையைப் போல மிகமிக பர்சனலானது. அதைப் பகிர்ந்து கொள்ளல் வேண்டாமே. முக்கியமான எஸ்.எம்.எஸ். வரும் போதெல்லாம், தொடர்பு கொண்டு செய்தியைக் கேட்டு விடுவதே நல்லது.

* இரண்டாவது, ஒருவர் தான் அனுப்பிய எஸ்.எம். எஸ்ஸையே, தான் அனுப்பியது அல்ல எனக்கூறி அதை நிரூபிக்கவும் முடியும். அதாவது நான் சொன்ன முதல் திருட்டுத் தனத்தின் எதிர் வடிவம். ஒரு ஈ-மெயிலை அனுப்பிவிட்டு, ஏதும் பிரச்னை வரும்போது, அதை நான் அனுப்பவில்லை, யாரோ, இன்டர்நெட்டைப் பயன்படுத்தி விளையாடி இருக்கிறார்கள், எனச் சொல்ல முடியும்.

* Ways2sms இல், நண்பரின் பிறந்த நாள் தேதியைப் பதிந்து வைத்திருந்தேன். அந்த தேதியில், அவருக்கான என் வாழ்த்து, அந்த தளத்திலிருந்து தானாகவே வருடா வருடம் அனுப்பப்பட்டுவிடும்.

நன்றாகத்தான் இருக்கிறது இந்த வசதி. ஆனால், இதில் என்ன தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது…?

அ. அவருடனான நட்பு நமக்கு மறந்து இருவரும் தூரப்போன பிறகும் நம் வாழ்த்து அவருக்குக் கிடைப்பது நட்பை பலப்படுத்தும்.

ஆ. அவரது பிரிவு, மனக் கசப்பினால் எனில், நம் வாழ்த்தை அவர் வேறுவிதமாகவும் பார்க்கக் கூடும் அல்லவா…? எனில், நாம் மறக்காமல் அந்த வாழ்த்துப் பதிவை நீக்க வேண்டும்.

* ரமாவின் மேனேஜர் அவளிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, அதை குறிப்பிட்ட அக்கௌண்ட்டில், கட்டி விடுமாறு சொன்னார். மறுநாள், அவள் நிச்சயதார்த்தம். லீவு வேறு கேட்டிருந்தாள். மேனேஜர் நாளை மறுநாள் அதைக் கட்டினால்போதும் எனச் சொல்லி விட்டார். ரமாவுக்கு சந்தோஷம். மறுநாள், போலீஸ் அவளைத் திருடிய குற்றத்துக்காகக் கைது செய்தது. பணம் கொடுத்ததை மானேஜர் மறுத்துவிட்டார். அது அவர் பொக்கணக்கு சொல்லி எடுத்த பணம். அவர் தான் கொடுத்தார் என்பதற்கு சாட்சி ஏதும் இல்லை.

அவள் என்ன செய்திருந்திருக்க வேண்டும்? அவர் பணம் கொடுத்ததும், ‘நீங்கள் கொடுத்த ரூபாய் இவ்வளவு பணத்தை நாளை மறுநாள் கட்டிவிடுகிறேன்; லீவு கொடுத்ததற்கு நன்றி’ என ஈ-மெயிலிலும், எஸ்.எம்.எஸ்ஸிலும், லீவுக்கு நன்றி சொல்லும் சாக்கில் சாட்சியங்களை ஏற்படுத்தியிருந்தால், பிரச்னையைச் சமாளிக்க சுலபமாக இருந்திருக்கும். அல்லவா?

பெட்டி செய்தி

‘ஈ-மெயில்களை, மறைக்க, மறுக்க, மாற்ற முடியும் எனும் பட்சத்தில், ரமா ஆதாரம் ஏற்படுத்துவதில், என்ன பிரயோசனம்?’ எனும் கேள்வி எழுகிறதா? ரமாவின் அந்த ஆதாரம், அவளுக்கு உதவியாக இருக்கக் கூடிய பலவற்றில் ஒன்று. ரமா, மானேஜர் இருவரின் மற்ற செயல்பாடுகள், மற்ற ஆதாரங்கள், இவற்றைப் பொறுத்து உண்மை நிரூபிக்கப்படும்.

* கல்லூரியில் படிக்கும் என் தங்கைக்கு எப்போது, தொலைபேசினாலும், ‘நீங்கள் அழைத்த எண்… பிஸி …பிறகு தொடர்பு கொள்ளவும்’ என்றே பதில் வரும். ஒரே நாளில் சுமார், 20 கால்களுக்குப் பிறகு, எனக்கு பொறி தட்டியது… ஆம்…பிஸி எனும் செய்தியையே காலர் ட்யூனாக வைத்துள்ளாள். ‘ஏன்டீ..?’ என்ற கேள்விக்கு அவள் சொன்ன பதில், ‘இல்லக்கா… யாராவது ஃபோன் பண்ணி எடுக்கலைன்னா கோச்சுக்கறாங்க… பிஸி…ன்னு தெரிஞ்சா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நாமளும் முக்கியமான அழைப்புகளை மட்டும் அட்டென்ட் பண்ணிணாபோதும்… அதான்…" என்றாள்.

ஈ-மெயில்:

* உங்கள் நண்பர் நீங்கள் அனுப்பிய ஈ-மெயிலைப் படித்துவிட்டாரா, இன்னும் படிக்கவில்லையா, எனத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது, நீங்கள் அனுப்பிய மெயிலைப் படித்துவிட்டு அதன்படி நடக்கப் பிடிக்காமல், ‘இன்னும் படிக்கவில்லை சார்’ எனச் சாக்குப் போக்கு ஸோல்லும் ஊழியரா?

அவர்கள் படித்ததை அவர்களுக்குத் தெரியாமலேயே அறிந்து கொள்ள SPYPIG உதவி செய்கிறது. நீங்கள் அவர்களைக் கண்காணிப்பதை தெரியப்படுத்த விரும்பினால், நீங்கள் படித்தது எனக்குத் தெரியும்" எனும் வாசகம் அவர்கள் படித்ததும் அவர்கள் ஸ்க்ரீனில் இடம் பெறும் படியும் செய்யலாம்.

* இப்போது உங்களுக்கு உங்கள் பாஸ் இதேபோல ஸ்பைபிக் உதவியுடன் ஒற்று வேலை மெயில் அனுப்புகிறார் எனக் கொள்வோம். அதை எப்படிக் கண்டுபிடிப்பது…?

எந்த மெயில் அப்படி இருக்க வாய்ப்புள்ளது என நீங்கள் சந்தேகிக்கிறீர்களோ அந்த மெயிலின் டெக்ஸ்டை காபி செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது, அந்த காபி செய்த பகுதிகள் எழுத்து உள்ள பகுதிகள் நீல நிறமாகும் அல்லவா..? ஆனால், ஒரு இடத்தில் மட்டும், எழுத்து இல்லாமல், நீல நிற சதுரம் இருக்கும். அப்படி இருந்தால் அந்த மெயிலில் ஒற்று அனுப்பப்பட்டிருக்கிறது எனக் கொள்ளலாம்.

* என் தோழி எனக்கொரு ஈ-மெயில் அனுப்பியிருந்தாள். அவள் பிக்னிக் சென்ற புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. மறுநாள் அதை என் மற்றொரு தோழிக்கு காட்டுவதற்கு தேடினேன். ஈ-மெயில் வந்த தடயமே இல்லை. கால் செய்து கேட்டதும்தான் தெரிந்தது. அந்த ஈ-மெயிலை ஒரு முறைதான் பார்க்க முடியும் என்று. புகைப்படங்கள் இன்டர்நெட்டில் தவறாகப் பதிவிறக்கப்படுவதால், அப்படி செய்ததாகக் கூறினாள் (அதற்கென தனி சாஃப்ட்வேர் அப்ளிகேஷன்ஸ் உண்டு.)

நன்று.

ஆனால், இதே முறையை எப்படியெல்லாம் தவறாக உபயோகிக்க முடியும்? ஈ-மெயிலில் ஒன்றைக் கூறி விட்டு பின் இல்லை என மறுக்கலாமே?

இதற்கு என்ன செய்வது?

முக்கியமான ஈ-மெயில்களைக் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத வேறு பெயரில் ஒரு ஃபோல்டரில் போடலாம்.

(காபி செய்து cut and paste செய்து ஃபைலை வேறெங்காவது வைத்துக் கொள்வதில், தொடர்பு இழக்கப்படும்(continuity miss) என்பதை நாம் அறிய வேண்டும். பிரச்னை ஏதும் வரும்போது, நாம் அதை ஒரு சாட்சியாகப் பயன்படுத்த முடியாது என நாம் அறிந்திருக்க வேண்டும்.)

* ஏன்? ஈ-மெயில் அனுப்பியவர்(தவறானவராக இருக்கும் பட்சத்தில்,) முன்பு சொன்னது போல் "hiding facility’ஐ உபயோகிக்காவிட்டால், தான் அனுப்பிய ஈ-மெயில்களை உங்களிடமிருந்து அழிக்க முயலக்கூடும். அழிக்கவும் முடியும். அப்போது அவர் உங்கள் இன்-பாக்ஸில் தான் கவனம் வைப்பார். அதில்தான் தன் மெயிலைத் தேடுவார்.

* ஒவ்வொரு சிஸ்டத்துக்கும் தோராயமாக… ஒரு (முகவரி போல எனச் சொல்லலாம்) ‘IP Address’ உண்டு. ஒரு ஈ-மெயில் எந்த சிஸ்டத்திலிருந்து வருகிறது என அதை வைத்து சொல்லலாம். ஒரு சிஸ்டமிலிருந்து ‘ஒரு மாதிரியான’ ஈ-மெயில் உங்களுக்கு வருகிறது என்றால் கூட அந்த குறிப்பிட்ட சிஸ்டமிலிருந்து வந்தது என அறியலாம்; ஆனால், பலபேர் உபயோகிக்கும், அந்த சிஸ்டமின் உரிமையாளர் மேல் வேண்டுமானால் குற்றம் சாட்டலாம். எந்த நபர் என நிரூபிப்பது கடினம். அல்லவா? அது தவிர IP Address ஐயும், hack and crack செய்ய முடியும். தவறாகப் பயன்படுத்த முடியும். எனவே, ‘ஜாக்கிரதை’… இதைத் தவிர வேறென்ன சொல்ல?

* வியாபார ஈ-மெயில்களுக்கு ’Certifying Authorities’ உண்டு. அவர்கள் மெயிலின் source-ஐ, அதன் நம்பகத் தன்மையை check செய்து certify செய்து தருவார்கள். ஆனால், இதற்கான செலவு நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். உங்களுக்கும், எனக்கும் அல்ல.

* என் வீட்டிலிருக்கும், என் கணினியை, என் மிகமிக நெருங்கிய தோழியைக் கூட தொட விடுவதில்லை என அவளுக்கு வருத்தம்தான். என்ன செய்ய? டெக் உலகம் அப்படி இருக்கிறதே? உங்கள், கணினி ஒரு சில நிமிடங்கள் தவறானவர் கைகளுக்குச் சென்றால்…

ஒரு மென்பொருள் உண்டு. அதை அடுத்தவர் கணினியில் install செய்து விட்டால், அந்த அடுத்த நபர் தன் கணினியில், என்னவெல்லாம் செய்கிறார்… பார்க்கிறார்… என பார்க்க முடியும். அது அவருக்குத் தெரியவே தெரியாது. (remote administration tools)

ஹையோ… என இருக்கிறதா?… சிந்தியுங்கள்.

* என் கணினியில், அடிக்கடி ஒரு விளம்பரம் வரும். கணினியை வைரஸ்ஸிலிருந்து பாதுகாக்க அந்த anti-virus மென்பொருளை வாங்கும்படி சொல்லும் விளம்பரம் அது. தினம் ஏழெட்டு முறையாவது அந்த விளம்பரம் வரும்.

திடீரென்று, என் கணினியில் ஒரு அவசரச் செய்தி… என் கணினி பழுதுபட்டுவிட்ட"தென்று. கணினியை முழு scan செய்து பார்த்தேன். பழுதொன்றுமில்லை. அவசரச் செய்தியின் படபடப்பில், தினம் நான் பார்க்கும், அந்த anti-virus software பதற்றத்தில், உடனே ‘buy / install’ என click செய்து விடுவேன் என அந்த anti – virus software விற்கும் நிறுவனத்தின் கணிப்பு / ஏற்பாடு… ‘எங்கிட்ட மோதாதே’… என நான் தப்பித்தேன்.

* நானென்ன பிஸினெஸ் பெண்ணா? என்னிடம் மொபைலிலும், ஈ-மெயிலிலும் திருட என்ன இருக்கிறது என எண்ணாதீர்கள். உங்களைப்பற்றிய, எந்தத் தகவலும் யாரோ ஒருவருக்குத் தெரிவது கூட, உங்களுக்கு ஊறு விளைவிக்கும். நம்புங்கள். ஈ-மெயில் அனுப்ப, புதிதாக வந்த ஒரு IM-இல் என் பெயர் முகவரியைப் பதிந்தேன். அவ்வளவுதான். என் மொபைல் எண், நான் அதிகம் விரும்பும் தகவல்கள், தேடும் விஷயங்கள்… என என்னைப்பற்றி அத்தனையும் அதில் பார்க்க முடிந்தது.

ஆனால், இதில், என் தவறுதான் அதிகம்.

‘நான் பதிந்த site-இன் related site-களுக்கு என்னைப் பற்றிய தகவல்களைத் தரத் தயார்’- என நான் முழு contract / disclaimer-ஐ சரியாகப் பார்க்காமல் ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

சரி. இப்படிப் பார்க்கலாம். உங்கள் முழு பெயரையும் url bar – இல் டைப் செய்யுங்கள். உங்களைப் பற்றிய நீங்கள் கணினியில் எங்கெல்லாம் பதிந்திருக்கிறீர்கள்… அத்தனை தகவல்களும் screen-இல் விரியும். இப்போது சொல்லுங்கள் உங்களைப் பற்றிய இத்தனை தகவல்கள் அடுத்தவருக்குத் தெரிவது அவசியமா?

இதற்கு என்ன செய்வது?

Contract / disclaimer களை நன்கு படித்து பின், Accept ஐ click செய்யவும்.

சமூக வலைதளங்கள்.

* நீங்கள் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டே வெவ்வேறு சைட்களைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கொள்வோம். அந்த பல site-களில் ஏதாவது ஒன்று, ஸ்பை சைட்" (ஒற்று வேலை) ஆக இருக்கக் கூடும்.

உதாரணமாக கரன்ட் செய்தி ஒன்று பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்… அன்றைய அரசியல் கிசு கிசு பற்றி…!

அந்தத் தகவல் குறித்த வார்த்தைகளை டைப் செய்து தேடுவீர்கள். அது குறித்த தகவல்களுடன், ஒரு site உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் தகவல்களை…!

இடையே ஃபேஸ்புக் பக்கம் வருவீர்கள். பின் கொஞ்சம் ஆஃபிஸ் வேலை அல்லது வேறெதாவது சைட்.

அதற்குள் அந்த ஸ்பை சைட் தன் வேலையைத் தொடங்கும், பாஸ்வோர்டுடன் உங்களது எந்தப் பக்கமாவது திறந்திருக்கிறதா என நோட்டமிடும். (அதற்கு பாஸ்வோர்ட் கிடைக்காது தான். ஆனால், ஃபேஸ்புக், ஈ-மெயில் போல ஏதோ ஒன்று திறந்திருக்கிறதா என நோட்டமிடும்.)

இப்போது அந்த ‘ஸ்பை சைட்’இன் தலைப்பு உடனே மாறி ஃபேஸ்புக் அல்லது ஈமெயில் என வரும் (உங்களது எந்த பக்கம் ஓபனாகி உள்ளதோ அந்த பக்கத்தின் பெயர் வரும்) ஆனால், அது உங்கள் கவனத்துக்கு வராது.

பல சைட்கள் ஓபனாகி இருக்க எந்த சைட்டின் தலைப்பில் ஃபேஸ்புக்/ஈ-மெயில் என்றிருக்கிறதோ அந்த பக்கத்தை க்ளிக் செய்வீர்கள். (அது ‘ஸ்பை சைட்டாக’ இருக்கலாம்)

அது மறுபடி கேட்கும்…லாக்-இன் செய்யச் சொல்லி…! அவசரத்தில் நாமும் லாக் -இன் செய்ய ஐடி பாஸ்வோர்டை டைப் செய்வோம். முடிந்தது ஜோலி.

இந்த ஐடி பாஸ்வோர்டை அவர்கள் உடனே உபயோகிக்க மாட்டார்கள். அதனால் உங்களுக்கு சந்தேகம் கூட வராது.

* ஒரு ஐந்து நிமிடம், உங்கள் ப்ரபொஃபைல் படத்தைப் போட்டு, உங்கள் பெயரில் அக்கவுன்ட் (ஃபேஸ்புக் போன்ற) ஆரம்பித்து, பின் (உங்கள்) அக்கவுன்டிலிருந்து, தனது அக்கவுன்டுக்கு ‘ஒரு மாதிரி’ டயலாக்குகளை அள்ளிவிட்டு, பின் அந்த இன்பாக்ஸ் மெஸேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து (அந்தப் பக்கத்தை அப்படியே புகைப்படம் போல காப்பி எடுப்பது), பின் அந்த மெஸேஜை ஷேர் பண்ணி.." அவரு (நீங்கள்) இப்படியெல்லாம் அசிங்கமாக பேசறாரு…!" என பொய் சொல்ல முடியும். ஒரு வேளை அந்த மாதிரி பிரச்னை வந்தால், அது பொய் என கண்டுபிடிக்க முடியும் தான். ஆனால், அந்தப் பொய்த் தகவல் நமக்குத் தெரியும் வரை எத்தனை பேருக்குப் பகிரப்பட்டதோ…?

* உங்களுக்கு, இது நீங்களா..?" என்றோ உங்கள் துறை பற்றிய வேலை வாய்ப்புச் செய்திகள்..!" என்றோ உங்களுக்கு ஆசை காட்டும் கேள்விகளுடன் பாப்-அப் வந்தால் அவற்றைத் திறக்க வேண்டாம். அவை உங்கள் நண்பரிடமிருந்து வந்திருந்தாலும்…!

அவை நண்பரிடமிருந்து அவருக்கே தெரியாமல் வந்திருக்கக் கூடும்.

அவற்றைத் திறந்தால், அப்போது முதல் அது ஆக்டிவேட் ஆக ஆரம்பிக்கும். உங்கள் அக்கவுன்டிலிருந்து, செய்திகளைப் படங்களை அனுப்ப ஆரம்பிக்கும். அவை ஒரு ‘மாதிரி’ யானவைகளாகவும் இருக்கக்கூடும். உஷார்!

* ஆன்லைன் செக்யூரிட்டி பற்றி சொன்ன இவை எவையுமே யாரையும் பயப்படுத்த அல்ல…! ரோட்டில் எப்படியெல்லாம் விபத்துக்கு வாய்ப்புள்ளது எனச் சொல்ல மட்டுமே…!

சாலை விதிகளைப் பின்பற்றுங்கள்; ஹெல்மெட் அணியுங்கள்; பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.

அவ்வளவே…!

முன்பெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் ‘பக்கத்தில் திருடன் இருக்கலாம். ஜாக்கிரதை…’ என போலீஸ் மைக் போட்டு கூவுவார்கள். ஆனால், இப்போது…‘நீ திருட /திருடனாக வாய்ப்பு … இதோ… உன் வீட்டுக்குள்’ எனும் நிலைமை. திருடும் களமே வீட்டினுள். என்ன செய்ய?

ஐரோப்பிய விண்கலம் நாளை பூமியில் விழக்கூடும்: விஞ்ஞானிகள் தகவல்!

 

ஜியோசி எனப்படும் கடல் நீரோட்டத்தை ஆராயும் ஐரோப்பிய செயற்கை கோள் ஒன்று செயல் இழக்க செய்யப்படுகிறது. இன்று அல்லது நாளை அது பூமியில் விழக்கூடும் என விஞானிகள் கருதுகின்றன.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடல் நீரோட்ட ஈர்ப்பு பற்றி ஆயவு செய்ய இது விண்ணில் செலுத்தபப்ட்டது. ஆனால் அக்டோபர் 21ம் தேதி எரிபொருள் பிரச்சனையால் பராமரிப்பு இன்றி சக்தி இழந்தது. சுமார் 80 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்கலம் உடைந்து  160 கி.மீ உயரத்தில் இருந்து வெற்றுப்பாதையில் விழக்கூடும் என ஐரோப்பிய விண்வெளி ஏஜென்ஸி தெரிவிகிறது.

அதோடு இந்த விண்கல துண்டுகள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் விழும் என கணிக்கமுடியாது என்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராச்சியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் ஒரு மனிதன் விண்கலம் தாக்கி இறந்தான் என்பது இதற்கு முன் நடந்ததில்லை.  மின்னல் தாகுவதை விட விண்கலம் தாக்குவது 65 ஆயிரம் மடங்கு குறைவு.

1997ம் ஆண்டு துல்சா, ஒக்லஹோமாவில் ஒரு பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வில்லியம்ஸ் எனபவர் மீது ஒரு உலோக துண்டு விழுந்து தாக்கியது. அப்போது அது டெல்டா ராக்கெட் துண்டு என உறுதி செய்யப்பட்டதாக உள்ளூர் செய்தி தெரிவித்தது.

இந்த சம்பவத்தில் வில்லியம்ஸ் காயம் அடைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

“வைக்கோல் குக்கர்” எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து சாதனை!

 vaikool

வைக்கோல் மூலம் வீட்டில் சமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்” என்கிறார் கோபிச்செட்டிபாளையம், ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து.

”எனக்கு அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பேன். ‘அடிக்கடி பெட்ரோல், சிலிண்டர் விலையை ஏத்திடுறாங்க. குடும்பத்தை நடத்துறது பெரிய சவாலா இருக்கு’னு அப்பாவும் அம்மாவும்  பேசிக்குவாங்க. இதுக்கு நாம் ஏதாவது செய்யலாமேனு நினைச்சேன். அப்போ உருவானதுதான் இந்த வைக்கோல் குக்கர்” என்ற ரிஷி சித்து, அதன் செய்முறையை விளக்கினார்.

”சாதம் சமைக்க, பாத்திரத்தில் தண்ணியைக் கொதிக்கவெச்சு, அதில் அரிசியைப் போடுவோம். அது முழுமையா வேகும் வரை காஸ் அடுப்பு எரியும். அப்படி இல்லாமல், ஒரு கொதிவந்ததும் அந்தப் பாத்திரத்தை எடுத்து, வைக்கோல் நிரப்பப்பட்ட அட்டைப் பெட்டியில நடுவில் வைக்கணும். பிறகு, வைக்கோலை அடைச்சு செய்த ஒரு தலையணையால் மூடிடணும். வைக்கோல் என்பது திறன் குறைந்த ஒரு வெப்பக் கடத்தி. அதனால், அது வெப்பம் வெளியே போகாமல் பாதுகாக்கும். அந்த வெப்பத்தில் உள்ளே இருக்கும் அரிசி, நாம குக்கரில் சமைக்கும் நேரத்தில் வெந்துவிடும். இதனால், எரிபொருள் மிச்சம்’ என்றார் ரிஷி.

சாதம் மட்டுமல்ல; பருப்பு, சுண்டல் மற்றும் அனைத்து விதமான காய்கறிகளையும் இப்படி வைக்கோல் குக்கர் மூலம் வேகவைக்கலாம்.

”இதனால், நேரம் மற்றும் எரிபொருள் மிச்சப்படும்;  ஆரோக்கியமானதும்கூட. முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது. குக்கரில் சமைக்கிறப்போ, கஞ்சி வெளியே போக வாய்ப்பு இல்லாததால் அரிசியோட கலந்துடுது… இது சர்க்கரை நோய்க்குக் காரணமாயிடுது. ஆனா, இந்த முறையில் நாம் கஞ்சியைத் தனியே வடிச்சுக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்” என்கிறார்.

ரிஷி சித்துவின் இந்தக் கண்டுபிடிப்பு, டெல்லியில் நடைபெறும் பாலஸ்ரீ விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 15 சிறந்த கண்டுபிடிப்புகளில்  ஒன்றாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

”விருது கிடைப்பதைவிட, இதைப் பார்த்து நூறு பேர் பயன்படுத்தினாலும் கணிசமான அளவு எரிபொருள் மிச்சப்படுமே. நாட்டுக்கு செய்யும் நல்ல விஷயமா அதை நினைக்கிறேன்” என்று ‘பெரிய மனுஷ’த் தோரணையில் பொதுநல அக்கறையுடன் சொல்கிறார் ரிஷி சித்து.

வாழ்த்துகள் சித்து!

Apple iPhone 6. நவீன வசதிகளுடன் வெளியாகவுள்ளது!

ஆப்பிள் கம்ப்யூட்டர்  உலகின் மிகப்பெரிய கணினி மற்றும்    தகவல் தொடர்பு     சாதனங்களைத் தயாரித்து     வெளியிடும்      நிறுவனம்.

ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் ஆனாலும் சரி,  அதனுடன் தொடர்புடைய மொபைல்கள் போன்ற தகவல்கள் தொடர்பு சாதனங்கள் ஆனாலும் சரி… அதற்கென தனியான iOS ல் இயங்கு கூடிய இயங்குதளங்களைப் பெற்றிருக்கிறது.


ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்களின் பாதுகாப்பும் மிக மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டவை. வேறு யாராலும் அதன் கட்டமைப்பைச் சேதப்படுத்தி எளிதில் வைரஸ் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது. அந்த வகையில் வெளியிடப்பட்ட ஒரு அருமையான ஆப்பிள் ஸ்மார்ட்போன் Apple iphone 5s.

 Apple iPhone 5s Smartphone specifications:

•4Inch Retina Display
• Nano SIM
• A6 Quad Core Processor
• 1GB RAM
• 8MP Camera
• Facetime HD Camera
• Bluetooth 4.0
• New Lightning Dock
•SIRI

இப்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களால் விற்பனை சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. தற்பொழுது உள்ள நிலைமையில் ஆப்பிள் போன் 5s கிட்டதட்ட விற்பனையாகிவிட்டது. இனி புதியதாக தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டால்தான் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் தனது புதிய ஸ்மார்ட் போனை வெளியிட உள்ளது. ஆப்பிள் ஐபோன 6 என பெயரிடப்பட்டுள்ள இப்போனில் ஆப்பிள் 5S Smartphone விட பல மடங்கு நவீன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் உலவுகின்றன.

 அப்படி என்னதான் அதில் இடம்பெற்றுள்ளன என்பதைப் பார்ப்போம்.

•மிகப்பெரிய திரையுடன் கூடிய Retina Display உடன் வெளிவர உள்ளது.

•திரையின் அளவு 4.8 அங்குலம்.

•வயர்லஸ் சார்ஜிங் வசதி…

•சாம்சங் நிறுவனம், எல்.ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள வளைந்த Flexible Screen போன்றதொரு தோற்றத்தையும் ஆப்பிள் ஐபோன் 6 ம் பெற்றிருக்கும் என நம்ப்பபடுகிறது.

இப்போன் அடுத்த ஆண்டு ஜூலை 2014 க்குள் வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5ஜி வலையமைப்புக்கு 600 மில்லியன் முதலீடு!


அடுத்த தலைமுறை வலையமைப்பான 5 ஜி (5th Generation) தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக ஹுவாயி அறிவித்துள்ளது.

தற்போது சில நாடுகளில் மட்டுமே 4ஜி அதாவது 4 ஆம் தலைமுறை வலையமைப்பு பாவனையில் உள்ளது. சில நாடுகளில் பரீட்சாத்தமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 5ஜி தொழிநுட்ப ஆராய்ச்சிக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 5ஜி வலையமைப்பானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பாவனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை தென்கொரிய நிறுவனமான செம்சுங் மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.

இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் செம்சுங் தெரிவித்திருந்தது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென செம்சுங் சுட்டிக்காட்டியிருந்தது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top