உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளவிக்கிபீடியா நடத்திய “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டியில் “சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தின் எம்.டெக். மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார்.
கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிபீடியா உலகம் முழுவதும் 300 மொழிகளை தன் சேவையை வழங்கி வருகிறது.
விக்கிபீடியா என்பது ஏதாவது ஒரு தகவலை அறியும் இடம் என பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கலாம்.
இது உண்மை என்றாலும் விக்கி பீடியாவில் மேலும் பயனுள்ள வசதிகளும் அடங்கி உள்ளது. அவைகள் என்னென்ன எப்படி உபயோகிப்பது என கொஞ்சம் பார்க்கலாம்.
1. விக்சனரி:நாம் தற்பொழுது பேசும் தமிழில் தமிழை விட ஆங்கிலமே அதிகம் வருகிறது. ஆங்கில சொற்களுக்கு விளக்கத்தை தேடிய காலம் போய் தமிழ் சொற்களுக்கே சரியான பொருள் தெரியாத நிலையில் உள்ளோம்.
நம்மை போன்றவர்களுக்கு பயன்படும் நோக்கில் ஆரம்பிக்கப்பட் சேவை தான் இந்த விக்சனரி. விக்கி + டிக்சனரி என்பதன் சுருக்கமே விக்சனரி.
இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு பொருள் அறிய விரும்பும் பெயரை டைப் செய்து என்டர் கொடுத்தால் அந்த வார்த்தைக்கான அர்த்தம் தமிழிலும் ஆங்கிலத்திலும் வரும் மற்றும் அந்த வார்த்தையை வாக்கியத்தில் எப்படி பயன்படுத்துவது போன்ற பல தகவல்கள் இதில் கிடைக்கிறது.
இந்த தளத்திற்கு செல்ல
–
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D 2. விக்கியினங்கள்இந்த தளத்திற்கு செல்ல
-
http://species.wikimedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8Dவிலங்கினம், தாவரஇனம், பூஞ்சையினம், பாக்டீரியங்கள், ஆர்க்கீயா, புரோடிஸ்டா போன்றவைகளை பற்றி விரிவாகவும் அழகு தமிழிலும் அறிய ஏற்ப்படுதப்பட்ட சேவை இந்த விக்கியினங்கள் என்ற சேவை. மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். இப்பொழுது தமிழில் கட்டுரைகள் காணப்படவில்லை கூடிய விரைவில் பகிரப்படும்.
ஆனால் உயிரினங்களை பற்றி ஆங்கிலத்தில் 3 லட்சம் கட்டுரைகள் உள்ளன.
3. விக்கி நூல்கள்விக்கிபீடியாவில் உள்ள மற்றொரு பயனுள்ள சேவை விக்கி நூல்கள். தமிழ் நூல்கள் குறைந்த அளவே உள்ளன. இருந்தாலும் வாசகர்களிடமும், ஆஸ்ரியர்களிடமும், மாணவர்களிடமும் நூல்களை பதிவேற்ற உதவி கோருகிறது விக்கிபீடியா. அனைவரும் கைகொடுத்தால் எண்ணற்ற தமிழ் நூல்களை இங்கு காண முடியும். அனைவரும் உதவினால் தமிழ் நூல்களை அழிவில் இருந்து காப்பாற்றலாம்.
தேவை என்றால் புத்தகங்களை PDF கோப்பில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு செல்ல
–
http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D 4. விக்கிமேற்கோள் (Quotes)அறிஞர்கள், தத்துவ ஞானிகள், பிரபல நபர்கள் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களில் இருந்து கற்றதை சுருக்கமாக கூறுவது தான் மேற்கோள்கள். இந்த மேற்கோள்களை அழகு தமிழில் வழங்கியவர் பெயருடன் அளிப்பது தான் விக்கிமேற்கோள் சேவை.
இதற்கான தளத்திற்கு செல்ல
:
http://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D இதற்கிடையில்தான் “இந்திய நினைவுச் சின்னங்கள்-2013′ என்ற புகைப்படப் போட்டி ஒன்றையும் ஆண்டு தோறும் நடத்துகிறது. இவ்வருடம் இந்தப் போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. இதில், கார்முகில்வண்ணன் எடுத்த இந்தப் பரிசுக்குரிய புகைப்படம், புகழ்பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலின் முழுத் தோற்றத்தையும் அழகாக பிரதிபலிக்கும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. விக்கிபீடியாவின் இந்தப் போட்டி பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்கள், பன்னாட்டு நடுவர்களால் தேர்வு செய்யப்படுகிறது.
பல நாடுகளிலிருந்து வெற்றி பெறுபவர்கள் லண்டனில் ஆகஸ்ட் 2014-ல் நடைபெறும் விக்கிமீடியன் மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்தப் போட்டி உலகத்தின் மிகப் பெரிய புகைப்பட போட்டியாக கின்னஸ் நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.