.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 8 December 2013

நடிகர் ரஜினிகாந்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கன்னடப் பாடல்!



நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான ராஜ் பகதூர் நடிக்கும் புதிய கன்னடப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது.


 'பெல்லிடரே பெல்லியபெகு ரஜினிகாந்தரங்கே' என்று தொடங்கும் இந்தப் பாடலில் மற்றவர்கள் மத்தியில் நடிகர் ரஜினி காட்டும் எளிமை, தன்னடக்கம் போன்ற அவரது நற்பண்புகள் போற்றப்பட்டுள்ளன.


ரஜினிகாந்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் இயக்குநர் ருஷியால் எழுதப்பட்டு பிரதீப் ராஜால் இசையமைக்கப்பட்டுள்ளது. விஜயப்பிரகாஷ் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.


இதன் சிறப்பம்சமாக இந்தப் பாடலுக்கு ரஜினிகாந்தின் ரசிகர்கள் 1000 பேர் நடனமாடியுள்ளனர் என்று இயக்குநர் ருஷி தெரிவித்துள்ளார்.


 இந்தப் படத்தில் வரும் 12 முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு வேடத்தில் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் நடிக்கின்றார்.

ஜீவாவின் ‘யான்’ படத்தின் ஆடியோ டிச.15-ல் வெளியீடு!



பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுக்கும் புதிய படம் ‘யான்’.


இப்படத்தில் ஜீவா-துளசிநாயர் ஆகியோர் நடித்த வருகின்றனர். நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.


இந்நிலையில், இப்படத்தின் ஆடியோவை வருகிற 15-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

தமிழில் நடிக்க ஆசைப்படும் அமிதாப் பச்சன்..









பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மலையாளத்தில் கூட, நடித்து விட்டேன்.


ஆனால், தமிழில் இன்னும் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளது.


யாராவது, நல்ல கதை கூறினால், தமிழில் நடிப்பேன் என, கூறியிருந்தார்.


இதோ, இப்போது, அவரின் ஏக்கம் தீரப் போகிறது. ஜீவா, துளசி நடிக்கும், 'யான்' படத்தில், ஒரு முக்கியமான வேடத்தில், அதாவது சிறப்பு தோற்றத்தில், அமிதாப் நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்திலிருந்து, செய்திகள் கசிந்துள்ளன.


பாலிவுட்டில், பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி கே சந்திரன் தான், இந்த படத்தின் இயக்குனர் என்பதால், அவரின் நட்புக்காக, இந்த படத்தில் நடிக்க, அமிதாப், சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டச்சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன்!



மூன்றெழுத்துப் படத்தில் ஹீரோவாக அறிமுகமான அந்த சின்னத்திரையில் இருந்து வந்த நடிகரின் மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறிக்கொண்டிருக்கிறது.


அதிலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் வசூலை வாரி குவித்ததால், இப்போது அவரிடம் கால்சீட் கேட்டு முக்கிய படாதிபதிகளே க்யூவில் நிற்கிற நிலை உருவாகியிருக்கிறது.


அதனால், ஏற்கனவே படத்துக்குப்படம் எகிறிக்கொண்டிருந்த நடிகரின் படக்கூலி தற்போது கேட்போரை தலைசுற்ற வைக்கிற அளவுக்கு உயர்ந்து நிற்கிறதாம்.


இந்த செய்திகளை மேற்படி நடிகரால் டீலில் விடப்படும் படாதிபதிகள் சிலர் லீக்அவுட் செய்து விடுவதும் ஒருபக்கம் நடந்து வருகிறது.


இதனால் நடிகருக்கு தேவையில்லாத சட்டச்சிக்கல் ஏற்படுகிறதாம்.


அதன்காரணமாக, சில நடிகர்கள் வாங்கும் சம்பளத்துக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே தயாரிப்பாளராகி வருவதைத் தொடர்ந்து, இப்போது இந்த இளவட்ட நடிகரும் விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறாராம்.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது !!



இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் .....!


தெரியாதோர்க்கு....


தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.


விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!


முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.


சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.


ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top