.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 December 2013

பெண்கள் இதை தெரிஞ்சுக்கணும்..



1. உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள்.

2. உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசப்பவர் களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

3. எப்போதும் சரியான உள்ளாடைகள் அணிவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு காரணமாகும். அதுபோல் தொள தொள உள்ளாடைகளும் அணியக்கூடாது. எப்போதும் பொருத்தமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

4. பெண்கள் புதிதாக தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக்கொள்ள வேண்டும். நட்பான அணுகுமுறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

5. சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில்தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. வீட்டில் சாதம், கூட்டு, பொரியல் ஆகியவற்றை சுவையாக சமைபது எப்படி என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பல தகவல்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் கிடைக்கின்றன.

6. வீட்டில் பொழுதுபோக்குக்காக ஒதுக்கபடும் நேரங்களில் இசையை ஈடுபாட்டுடன் கேட்கலாம். மனது இலகுவாகும்.

7. டி.வி பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள் திடீரென உங்கள் மீது விழுந்தாலோ, அருகில் உள்ள மேஜையிலிருந்து யாராவது இருமினாலோ உங்களுக்கு எரிச்சல் வரும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலிலே நீங்களாகவே அந்த மாதிரியான தொந்தரவுக்கு இடம் கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்து விடுங்கள்.

8. வீட்டில் பொருள்கள் ஆங்காங்கே ஒழுங்கு இல்லாமல் சிதறிக் கிடந்தால் எரிச்சல் ஏற்படும். இப்படி சிதறிக் கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் சேகரிக்கும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம்.

9. குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்திடுங்கள். கொதிக்க வைத்து ஆறியபின் அதை குடிநீராக அருந்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் வெப்பத்தால் உடான உடல் சூடு குறையும். சீரக தண்ணீர் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.

10. வீட்டில் தனியாக இருக்கும் போது திருடர்கள் உங்களை தாக்கும் நோக்கத்தோடு வந்தால் அவர்க ளிடமிருந்து தப்பிக்க காரத்தே போன்ற கலைகளை தெரிந்து வைத்திருங்கள். தற்காப்பு கலை எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் உங்கள் மனது எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்கட்டும்.

11. பெண்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தனியாக வசிக்க நேரிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி இருபதால் மனரீதியாக தைரியம் கிடைக்கும்.

12. பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விடவும், அதை சேமிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நுறு ருபாய் என்றாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்தே முதலீடு செய்யவேண்டும்.

13. திடீரென உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் அதிக பேர் வந்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் இன்முகத் தோடு வேலையை பாருங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகையே விருந்தாளிகளின் பாதி பசியை போக்கிவிடும்.

14. புத்தகங்களை படிப்பது போல் சிறந்த பொக்கிஷம் வேறென்றும் இல்லை. நல்ல நல்ல சிந்தனை உள்ள புத்தகங்களைம், வரலாற்று பதிவுகளையும் படிப்ப தன் முலம் பல விஷயங்களை வீட்டில் இருந்தவாறு தெரிந்து கொள்ளலாம். 15. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுவது நல்லது.

ஓஷோ சொல்கிறார் ...




மிகவும் பக்திமானான தகப்பன் ஒருவன் தன் மகனை மிக ஒழுக்கமாக வளர்த்து வந்தார்.


ஒரு நாள் அவர்கள் தேவாலயத்திற்கு போகும் பொது அவர் தன் குழந்தையிடம் இரண்டு நாணயங்களை கொடுத்தார். ஒன்று ஒரு ரூபாய், மற்றொன்று ஒரு பைசா நாணயம். தேவாலய நன்கொடைப் பெட்டியில் மகனுக்கு எது விருப்பமோ அந்த நாணயத்தைப் போடலாம் என்று அனுமதியும் கொடுத்தார்.


மகன் ஒரு ரூபாய் நாணயத்தைதான் பெட்டியில் போடுவான் என்று தந்தை எதிர் பார்த்தார் . அவனிடம் அதை எதிர்பார்க்கலாம் நம்பலாம்.


அப்படித்தான் அவன் வளர்க்கப் பட்டிருந்தான். தகப்பன் காத்திருந்தார் . கூட்டம் கலைந்ததும் என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்தார் .


பையனைக் கேட்டார் நீ என்ன செய்தாய் என்று.


பையன் சொன்னான் ஒரு ரூபாயை வைத்துகொண்டு ஒரு பைசாவையே தான் பெட்டியில் போட்டதாக சொன்னான் .


தந்தையால் நம்ப முடியவில்லை .ஏன் நீ இப்படிச் செய்தாய் நான் உனக்கு எப்பொழுதும் உயர்ந்த கோட்பாடுகளைத்த்தானே கற்று கொடுத்தேன்  என்று அதற்க்கு பையன் சொன்னான் பாதிரியார் தன்னுடைய பேச்சில் கடவுள் மகிழ்ச்சியுடன் கொடுக்கும் மனிதனை நேசிக்கிறார் என்று கூறினார் என்னால் ஒரு பைசாவை மட்டுமே மகிழ்ச்சியாக கொடுக்க முடிந்தது. ஒரு ரூபாயை அல்ல !


ஓஷோ சொல்கிறார்  கடவுள் மகிழ்ச்சியுடன் கொடுக்கும் மனிதனைதான் நேசிக்கிறார் நீ மகிழ்ச்சியோடு செய்தால் மததன்மையோடு செய்கிறாய் என்று அர்த்தம் அது பைசாவாக இருக்கலாம் அது ஒரு பொருட்டே அல்ல,....

கணிப்பொறி தமிழா...




கணிப்பொறி தமிழா உன் கண்களை கணணி திரை விட்டு கழட்டு!
ஏ.சி  அறையில் இருந்து எழுந்து வா !

கிளைகளைப் பரப்பும் அவசரத்தில் வேர்களை மண்ணிலிருந்து  வெட்டி விடாதே!

நீ படித்த பழைய பள்ளிக் கூடத்தைப் போய்ப் பார்!
அதன் மேற்கூரையில் உன் பிஞ்சு சிரிப்பு ஒட்டி இருக்கும்!

நீ பிறந்த ஆஸ்பத்திரி எதுவென்று தேடு அதன் வாயிலில் நின்றொரு புகைப் படம் எடுத்து ரசி!

நீ ஓட்டிய முதல் நடைவண்டி இன்சாட் 5 ஐவிட முக்கியமானது அதை பாதுகாத்து வை!

நீ ஆடிய ஊஞ்சல் மரத்தின் தோள்களில் கொஞ்சம் தோழனாய் சாய்ந்து நில்!

நீ ஆனா ஆவன்னா எழுதிய சிலேட்டுப் பலகை கிடைத்ததால் ஆஸ்கார் விருதாய் கருதி
வரவேர்ப்பறையில் மாட்டி வை!

நீ குரங்கு பெடல் போட்ட சைக்கிளை கண்டெடுத்து உன் காருக்கருகில் நிறுத்திக்கொள்!

நீ வாங்கிய முதல் சாக்கு ஓட்டப் பந்தய பரிசை மேருகேற்றிப்பர்!
அது உன் முதல் வெற்றியல்லவா?

நீ படித்த பழைய பள்ளிப் புத்தகங்களை அள்ளி ஆசையோடு தடவு!
அது உன் தாய்ப்பால் மேஜை !

நீ பெற்ற முதல் சம்பளம் இருந்த உறையை பெட்டிக்குள் தேடி எடுத்து வாசம் பார்!
நீ அணிந்த சிறுவயசு ஆடைகளை துப்பறிந்து எடு!
அது உன் பால்ய வயசின் நினைவுச் சின்னம்!

நீ பெற்றோருக்கு எழுதிய கசங்கிய கடிதங்களை எடுத்து அதில் வழியும் பாசத்தில் கண்ணீர் மல்கு!

நீ நெஞ்சுக்குள் புதைத்த சருகு மண்டிய நண்பர்களின் முகவரிகளுக்கு நேரில் போ!
நீ எப்போதும் மறக்க முடியாதென்று நினைத்து மறந்து போன காதலை யோசி!

நீ பழைய நினைவுகளில் மூழ்க மூழ்க புதிய கதவுகள் திறக்கும்!

நீ உணர்ச்சி குவியலுக்குள் ஊற ஊற எந்திர தன்மை பறக்கும்

இரைப்பைக்காக மட்டும் வாழ ஆரம்பித்து விட்டால் இதயம் தேவை இல்லை!
இதயத்திற்காக மட்டும் வாழ்ந்து போகவும் இரைப்பை விடுவதில்லை!

இரண்டையும் சமமாக்கு !
இடைவிடாமல் சந்தோசமாக்கு!

பா.விஜய்

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்க....?



1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code)
திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.
பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்
கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா
காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட்
நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள்
எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை
எடுத்து சிரித்தபடியே “எஸ்….” என்றோ அல்லது “சக்சஸ்” என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான
விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.
அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9.. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்,
நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்
செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு
பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று
சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச
நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்
போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து
வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,
மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது
போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும்
நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக
இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.
போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி
குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி
கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால
நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை
மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால்
நமக்காக யார் பேசுவார்கள்?

புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம்?



நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்...


ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?

ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.

பெண்: நீ என்னை விரும்புகிறாயா?

ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !

பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?

ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!

பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?

ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.

பெண்: நீ என்னை அடிப்பாயா?

ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்

பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?

திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top