.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 30 December 2013

மீன் பிரியாணி - ரெடி!!!




மீன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மீன் - 1/4 கிலோ

அரிசி - 2 ஆழாக்கு


வெங்காயம் - 150 கிராம்


தக்காளி - 150 கிராம்


இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்


புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு


மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்


தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்



மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்


தயிர் - 1 கப்


உப்பு - தேவையான அளவு


எண்ணெய் - 1/2 குழிக் கரண்டி



செய்முறை:


* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

* வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் "தம்" சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.

* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

வடிவேலுவின் இடைத்தைப் பிடிப்பாரா சூரி ?




வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காட்சியின் மூலம் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் பட்டியில் இடம்பிடித்த நடிகர் சூரி தற்சமயம் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார்.


நாகேஷ் நகைச்சுவை நடிகராக இருந்த காலத்திலிருந்தே நகைச்சுவை நடிகர்களுக்கென்று சில காலகட்டங்கள் பொற்காலமாக அமைந்திருந்தது.



குறிப்பிடத்தக்கது.கடந்த தொண்ணூறுகளில் தொடங்கி பல ஆண்டுகள் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைக் காட்சிகள் பிரபலமாக இருந்துவந்தன. கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைக் காட்சிகள் குறைந்து வந்த காலங்களில் விவேக் மற்றும் வடிவேலு ஆகியோர் கொடிகட்டிப் பறந்தனர். குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவைகள் தமிழர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.


வடிவேலு நடிக்கும் திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாக அதிகமாக இல்லாததாலும், சந்தானத்தின் புதிய முறை நகைச்சுவைகளாலும் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே சந்தானம் மிக முக்கிய நகைச்சுவை நடிகராக வலம்வருகிறார்.


அந்த வகையில் தற்பொழுது அதிகப் படங்கள் நடிக்கும் நகைச்சுவை நடிகருக்கான பட்டியலில் “பரோட்டா” சூரியும் இடம்பெற்றுள்ளார். இவரது நடிப்பில் இவ்வாண்டில் வெளியான “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “தேசிங்கு ராஜா” முதலான படங்கள் பெரும் வாய்ப்புகளைத் தேடித்தந்தன.


இவர் நடிப்பில் வருகிற 2014ல் இளைய தளபதி விஜயின் “ஜில்லா”, சிவகார்த்திகேயனின்” மான் கராத்தே”, ஜெயம் ரவியின்  “ நிமிர்ந்து நில்” மற்றும் விஜய் சேதிபதியின் “ ரம்மி” மற்றும் அனேக திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

20 கோடியைத் தொட்ட சிவகார்த்திகேயன்...!!!




கோலிவுட்டின் மற்றொரு நம்பகமான ஹீரோவாக உருவெடுத்து வரும் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெருவெற்றியடைந்து வசூலை வாரிக் குவித்தது. இவர் தற்பொழுது “மான் கராத்தே” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.


மான் கராத்தே திரைப்படம் தற்பொழுதுதான் உருவாகிவரும் சூழலில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமைகள் ஏற்கெனவே 20 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கள் பரவியிருக்கின்றன. பெரும்பாலும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள்தான் ரிலீசிற்கும் முன்பாகவே இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்படும். அத்தகைய சாதனையை சிவகார்த்திகேயன் மிகக் குறைந்த காலத்திலேயே, மிகக் குறைந்த படங்களில் மட்டுமே நடித்துப் பெற்றிருக்கிறார்.


மான் கராத்தே திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனத்தில், அவரது முன்னால் உதவி இயக்குனரான திருக்குமரனால் இயக்கப்பட்டு வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை சுமார் 35 கோடி பட்ஜெட்டில் தயாரித்துவருகிறது.


ஹன்சிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

400 கோடிகளைக் குவித்துள்ள தூம் 3




அமீர்கான், கத்ரீனா கைஃப் , அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா நடிப்பில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 20ல் வெளியான தூம் 3 திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய்கள் வரை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.



தூம் படவரிசையான தூம் 3 திரைப்படம் கடந்த டிசம்பர் 20ல் வெளியானது. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். தூம் படவரிசைகளான தூம் மற்றும் தூம் 2 ஆகிய படங்களின் வசூலை விட அமீர்கான் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளதாகப் பாராட்டப்படுகிறது.



இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் 250 கோடிகள் வரை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் இந்தி வெர்சன் 200 கோடிகளுக்கும் மேலாகவும் இதர மொழிகளில் சுமார் 20 கோடிகள் வரையிலும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.



இப்படத்தின் இந்த பிரம்மாண்ட வெற்றியினை அமீர்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் விக்ரம் பிரபிவின் அரிமா நம்பி





விக்ரம் பிரபு மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடித்துவரும் அரிமா நம்பி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.


கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த ஆனந்த ஷங்கர் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.


விக்ரம் பிரபு நடிப்பில் சமீபமாக வெளியான “இவன் வேற மாதிரி” திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததுடன், சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவன் வேற மாதிரி திரைப்படத்தை எங்கேயும் எப்போதும் திரைப்பட இயக்குனர் சரவணன் இயக்கியிருந்தார்.


விக்ரம் பிரபு தற்பொழுது சிகரம் தொடு மற்றும் தலப்பாக்கட்டை முதலான படங்களில் நடித்துவருகிறார். பிரியா ஆனந்த் தற்பொழுது வை ராஜா வை,
பொடியன், இரும்புக் குதிரை முதலான படங்களில் நடித்துவருகிறார்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top