.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 15 May 2013

மொபைல் தொலைந்துவிட்டதா? உங்களுக்காக...





தொலைந்து போன MOBILE-லை மீட்டெடுக்க





     உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.




     இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.




IMEI என்பது International Mobile Equipment Identity என்பதின் சுருக்கம் ஆகும்.




  சரி. இந்த (IMEI) International Mobile Equipment Identity எண்ணைஎப்படிக் கண்டறிவது.?


  • உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்

  • உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.

  • அதை பாதுகாப்பாக ஒரு இடத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


  • எப்போதாவது உங்கள் மொபைலை நீங்கள் இழக்க நேரிடும்போது இந்த எண் உங்களுக்கு உதவும்

  • மேலும் தொலைந்து போன மொபைலை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்களிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்க உதவும்.

IMEI எண் மொபைலை எப்படி கண்டுபிடிக்க உதவும்? அல்லது எப்படி பாதுகாக்க உதவும்?



     உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதற்கு cop@vsnl.net  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.



மின்னஞ்சலில் முக்கியமாகஇருக்க வேண்டிய தகவல்கள்

  • பெயர் (NAME)

  • முகவரி (ADDRESS)

  • போன் என்ன மாடல் (MOBILE PHONE MODEL)

  • அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர் (MOBILE PHONE COMPANY)

  • கடைசியாக போன்செய்த எண் (LAST DIALED NUMBER)

  • உங்கள் மின்னஞ்சல் முகவரி (EMAIL ADDRESS)


  • எந்த தேதியில் தொலைந்து (LOST ON DATE)

  • போனின் அடையாள எண் (IMEI) 


   ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும்
  
     தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.




      Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின் (Strong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்துநடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவார்கள்




    அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06#என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்த Costly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும். மீண்டும் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

குருவும் சீடரும்! குட்டிக்கதைகள்-6


குருவும் சீடரும்!  குட்டிக்கதைகள்-6





     தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர்.


    எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். 


    ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார்.

       மிகக்கடுமையாய் ஏசினார் குரு.


   சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு
     அந்த இளைஞர் வருந்தவில்லை.


சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, 


அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?” என்று கேட்டார்.


”உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு” என்பதே அந்த வாசகம்.

 
     வெட்கித் தலை கவிழ்ந்தார் குரு.

 
அந்த குரு, துரோணர்.


அந்த சீடர் தருமர்.

குட்டிக்கதைகள்-5 - "படைப்பு"



 குட்டிக்கதைகள்-5 - "படைப்பு"




      அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார்.


     அந்த வழியே சென்ற மற்றொருவர், “இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்” என்று குயவரிடம் கேட்டார்.


     “நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரப் போகிறேன்” என்றார்.


    “அப்படியா” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளை யெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டு உடைக்க ஆரம்பித்தார்.


    பதறி போய் ஓடிவந்த குயவர் இரைந்து கத்தினார்.
அதற்கு “உனக்கு சந்தோஷமாக இருக்குமே என நினைத்தேன்” என்றார் வந்தவர்.


    “நான் செய்த பானைகளை என் முன்னால் போட்டு உடைத்தால் எனக்குச் சந்தோஷம் வருமா?” என்றார் கோபமாக.

 
" நீ மட்டும் இறைவனின் படைப்பை அவர் முன்னால் கொன்றால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நினைக்கிறாயே "


குயவருக்கு புரிந்தது..... 

உலகின் டாப் 10 பொருட்களின் வரலாறு - FACEBOOK SHARE IMAGES - 10

FACEBOOK SHARE IMAGES - 10

     இன்று உலகின் ஜாம்பவானாக இருக்கும் பொருட்களின் சிலவற்றின் முதல் பயணம் இவைகள் எந்த ஆண்டில் இருந்து இயங்குகிறது என்பதை பார்போம்.



முதல் பயணிகள் விமானம்   ஜனவரி 1, 1903.



 முதல் அணுகுண்டு  ஆகஸ்ட் 6, 1945.



 முதல் போர்டு கார்  ஆகஸ்ட் 12, 1908. 



முதல் ஆப்பிள் ப்ராடக்ட்   ஜனவரி 24, 1984. 



முதல் டெலிவிஷன் சேவை   ஜனவரி 1, 1927.



முதல் பென்சிலின் மருந்து  -  ஜனவரி 1, 1928. 



முதல் கைப்பேசி  -  ஏப்ரல் 3, 1973



முதல் விண்வெளி பயணம் -   ஜனவரி 1, 1981. 



முதல் இண்டர்நெட்  -  ஜனவரி 1, 1989. 





முதல் வானொலி சேவை - டிசம்பர் 24, 1906. 



உசேன் போல்டின் வேகத்தை மிஞ்சியது அமெரிக்க ரோபோட்







      உலகின் அதி வேகமாக செல்லக் கூடிய ரோபோட்டை அமெரிக்க விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இது லிம்பிக் பதக்க வீரர் உசேன் போல்டை விட வேகமாக செல்லுமாம் இந்த ரோபோட்.

 
      ஆம்!  உசேன் போல்டின் வேகம் மணிக்கு 27கிமீ, இந்த ரோபோட்டின் வேகம் மணிக்கு 29கிமீ ஆகும். இது சிறுத்தை வடிவில் காணப்படும் ரோபோட் ஆகும், இதற்காக விஞ்ஞானிகள் குழு 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு இதை கண்டுபிடித்துள்ளனர்.


    அமெரிக்க இராணுவத்தில் விரைவில் இது சேர்க்கப்பட உள்ளது,  ஏற்கனவே மிக வலுவாக உள்ள அமெரிக்க இராணுவம் இந்த ரோபோட்டை சேர்த்தால் மிகவும் வலுப்படும்.


இதோ இந்த ரோபோட்டின் படங்கள்






 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top