.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 14 May 2013

“பென்ட் ரைவ்” (PEN DRIVE) பயனுள்ள தகவல்


நீங்கள் பென்ட் ரைவ்” (PEN DRIVE) பயன்படுத்துபவரா..?






  பென்ட் ரைவ்” ஆனது “Data”வினை சேமித்து வைக்கவும், வேறு இடத்திற்குக் கொண்டு செல்லவும் உதவும்.


  இந்த Pen Drive வில் 4GBக்கு மேலே Copy செய்ய் முடியாது என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?


    உங்களிடம் 4GBக்கு மேற்பட்ட ஒரு Pen Drive இருந்தால், அதில் 4GBக்கு மே்ற்பட்ட ஒரு தனியான பைலை காப்பி செய்து பாருங்கள் File Too Large” என்ற செய்தி தோன்றும்..


   ஏன் என்றால் Pen Drive இனை Format செய்யும் போது Default ஆகவே FAT32 என்ற File System இல் பண்ணிவிடும்.இதில் தனியான ஒரு File Size இன் அளவு 4GB ஆக வரையறுக்கப்பட்டு காணப்படுகிறது.


  இதனால்தான் Copy செய்ய முடியாமல் இருக்கிறது. அப்படி என்றால் 4GBக்கு மேற்பட்ட எந்தவொரு தனி பைலையும் காப்பி செய்ய முடியாதா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கலாம். இதை (FAT32)NTFSக்கு மாற்றினால் மட்டுமே  காப்பி செய்ய முடியும்.


முறை: 1

     இது அனைவருக்கும் தெரிந்த முறை தான், இந்த முறையில் Format செய்வதன் மூலம் உங்களுடய பழைய பைலை இழக்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள்Pen Drive மீது Right Click செய்து >> Format >> File System என்பதில் NTFS கொடுத்து Format பண்ணுங்கள்.

முறை : 2

     இந்த முறை முலம் செய்தால் உங்களுடைய பழைய பைல் அப்படியே இருக்க மாற்றித் தரும்.

RUNக்கு சென்று (Windows key மற்றும் R) ஆகிய key-களை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் பெற முடியும்) CMD என டைப் செய்து OK பண்ணுங்கள்.

    பின் , Convert I: /FS:NTFS என டைப் செய்து enter பண்ணுங்கள். (இங்கு I என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில எழுத்தினை குறிக்கும்) சிறிது நேரத்தில் மாறிவிடும்.

  இந்த 2 முறையும் உங்களுக்கு வெற்றியளிக்கவில்லையா?

முறை: 3

        RUN இல் CMD என டைப் செய்து OK பண்ணுங்கள். பின் chkdsk g: /f என டைப் செய்து என்டா் பண்ணுங்கள். (இங்கு g என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில எழுத்தினைக் குறிக்கும்)

  அடுத்து 2-வது முறையை பின்பற்றுங்கள் நிச்சயமாக NTFS இற்கு மாறிவிடும்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top