.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 13 September 2013

சிக்கனமே செல்வம்!



சிக்கனம் என்பது, எல்லா தரப்பினருக்குமே நன்மை தரும். வீட்டுக்குள், "இதிலென்ன பெரிதாக செலவாகி விடப் போகிறது...' என்று நாம் நினைக்கும், விஷயங்கள் தான், சிறுகச் சிறுக செலவைக் கூட்டும். "சிறுதுளி பெரு வெள்ளம்' என்பது, சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும்.

வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில, "டிப்ஸ்' இதோ:


 

* குண்டு பல்புகளுக்குப் பதிலாக, "சி.எப்.எல்., விளக்குகளைப் பயன்படுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, விளக்குகள் 
மற்றும் மின் உபகரணங்களை அணைக்க மறக்காதீர்கள்.
 


* "சார்ஜர்களை' அணைத்து விடுங்கள். அவை, "சார்ஜ்' செய்யா விட்டாலும், மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கும்.
 

* பாத்ரூம் ஷவரில், குறைவாகத் தண்ணீர் விழுமாறு அமைத்துக் கொள்ளுங்கள். அது, தண்ணீர் சிக்கனத்துக்கு உதவும். சோப்பு போடும்போது, ஷவரில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
 

* பாத்ரூமில் முகம், கை துடைக்க, "டிஷ்யூ' பேப்பரை பயன்படுத்துவதற்கு பதில், துண்டை பயன்படுத்தலாம்.
 

* "இங்க் காட்ரிஜ், சிடிக்கள், டிவிடிக்கள்' போன்ற கணினி பயன்பாட்டு பொருட்களில் பெரும்பாலானவை, மறு பயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு ஒயர்கள், "ஸ்பீக்கர்'கள் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
 

* துணி அல்லது பாத்திரம் அதிகமாக இருக்கும்போது மட்டும், "வாஷிங் மெஷின்' அல்லது, "டிஷ் வாஷரை' பயன்படுத்துங்கள். ஆனால், கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், "ஹாப்- லோடு' அல்லது, "எகானமி செட்டிங்'கை அமைத்துக் கொள்ளுங்கள்.
 

* 'ஏசி'யின்,'ஏர் பில்டரை' மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள் அல்லது மாற்றி விடுங்கள்.
 

* புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது, மின்சக்தியை சேமிக்கும் திறன் பெற்றவை என்பதற்கான, "எனர்ஜி ஸ்டார் லேபிளை' பார்த்து வாங்குங்கள்.
 

* மின் சக்தியை அதிகமாக, "சாப்பிடும்' பழைய உபகரணங்களுக்கு விடை கொடுத்து, புதியவற்றை வாங்குங்கள்.
 

* தண்ணீரைச் சுட வைக்க, "சோலார் வாட்டர் ஹீட்டரை' பயன்படுத்தலாம்.
 

* குழாய்களில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தால், உடனே, சரி செய்யுங்கள்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top