செய்முறை:
விரிப்பில் வஜ்ராசனத்தில் அமரவும். பின்னர் நிமிர்ந்து இயல்பான சுவாசத்தில் மெதுவாக உடலை முன் புறமாக குனியவும். உங்கள் தலை படத்தில் உள்ளபடி கால்களுக்கு இடையே இருக்க வேண்டும்.
கைகள் இரண்டையும் பின்புறமாக கொண்டு சென்று கால் பாதத்தின் பின்புறத்தை தொடவும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.
பயன்கள்:
முதுகுத்தண்டுக்கு மேலும் புதிய ரத்தம் கிடைக்க வழி செய்கிறது. நரம்பு மண்டலத்திற்கு ஆக்சிஜன் கிடைக்க வழி செய்கிறது. தைராய்டு, மூலம், ஜலதோஷம், சைனஸ் பிரச்சனை போன்ற நோய்களை குணமாக்குகிறது. தூக்கமின்மை, சர்க்கரை நோய் மற்றும் மனநோய் தீருகிறது.