
கணினி மேல் கொண்ட காதலால் பலர் இன்னும் கட்டற்ற பல மென்பொருட்களை இலவசமாக கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிதாக கணினி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் எளிதாக கணினி மொழி கற்றுக்கொடுக்கவும் இயக்கி பார்க்கவும் ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி: http://www.programr.com
இத்தளத்திற்கு சென்று நாம் கணினி மொழியில் எந்த மொழியில் திறமையானவர்களாக மாற வேண்டுமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான் நம் வேலை அடுத்து வரும் திரையில் புதிதாக மொழி கற்பவர்கள் என்னென்ன அடிப்படை புரோகிராம்கள் உள்ளன என்பதை ஒவ்வொன்றாக சொடுக்கி பார்ப்பது மட்டுமல்லாமல் அதை இயக்கியும் ( RUN) பார்க்கலாம். ஏற்கனவே புரோகிராம் எழுதியவரின் கோடிங் Download என்பதை சொடுக்கி தரவிரக்கியும் நமக்கு தேவையென்றால் மாற்றம் செய்தும் பார்க்கலாம்.
கணினியின் அனைத்து முக்கிய மொழிகளுக்காக நேரடியான புரோகிராம் பயிற்சி நம்மை குறிப்பிட்ட அந்த மொழிகளில் வல்லவர்களாக்கிவிடுகிறது. இதைத்தவிர புரோகிராம் எழுத தெரிந்தவர்களுக்கு போட்டியும் வைக்கிறது இத்தளம், சவால் விடும் பல கோடிங்களும் இத்தளத்தில் எளிதாக கிடைக்கிறது, புரோகிராம் எழுதுபவர்களுக்கும் புதியவர்களுக்கும் இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.