.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 23 September 2013

நீங்கள் வேகத்தை விரும்புபவரா?


கார் பந்தயத்தை தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். கார்கள் சென்று கொண்டிருக்கும் வேகம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதனை விட ஒரு சில சுற்றுகளுக்குப்பிறகு கார் பழுது பார்க்கும் மையத்திற்கு வந்து சில நொடிகளில் அனைத்து வேலைகளையும் முடித்து, மீண்டும் பந்தய பாதையில் அதி வேகத்துடன் செல்ல ஆரம்பிக்கும்.


 


அப்படிப்பட்ட கார் பந்தயத்தில் ஒரு சில நொடிகளில் நான்குக்கும் மேற்பட்டவர்கள் காரில் பழுது நீக்கும் வேகம் அனைவரையும், இது எப்படி சாத்தியம்? என்று ஆச்சரியப்பட வைக்கும். வேகத்துடனும், விவேகத்துடனும் பொறியாளர்கள் காரை சரி செய்தால் தான்  பந்தய வீரர் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக செல்ல முடியும். என்பதை இதன் மூலம் உணர்ந்திருப்பீர்கள்.


விறு விறுப்பு நிறைந்த கார் பந்தய பொறியாளர் என்பவர் பந்தய வீரரின் வலது கையை போன்றவர். கார் பந்தய களத்தில் இயங்கும் தன்மை, வீரரின் காரை இயக்கும்  திறன் போன்றவற்றை எல்லாம் நொடிப் பொழுதில் கணித்து, வாகனத்தின் இயங்கு திறன், எரிபொருள் தேவைகளை சிறப்பான முறையில் சீர் செய்ய வேண்டும்.


வேலை வாய்ப்புகள்


தற்பொழுது இந்தியாவில் வாகனப் பந்தயத் துறை வளர்ந்து வரும் துறையாக இருக்கிறது. வாகனப் பந்தயத்தில் பங்கேற்பதற்கு இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.


இவை தவிர உலகம் முழுவதும் அதிகமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. திறன் மிக்க பொறியாளர்களை தங்களோடு இணைத்துக்கொள்ள பெரிய பந்தய குழுக்கள் ஆர்வம் செலுத்துகின்றன.


யார் தேர்ந்தெடுக்கலாம்?


உங்கள் பொழுதுபோக்காக இருக்க வேண்டும்.
கார்களை விரும்புபவராக இருக்க வேண்டும்.
சவால்களை சந்திப்பதில் ஆர்வம் இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் பயணிக்க தயாராக இருக்க வேண்டும்.
இறுக்கமான சூழ்நிலைகளை எளிதாகக் கையாளும் மன நிலை வேண்டும்.


தேவையான கல்வித் தகுதி


பொறியியல் இளநிலையில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், மெக்கானிகல் இன்ஜினியரிங் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

முதுநிலை பொறியியலில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.


சிறந்த கல்வி நிறுவனங்களில் சில

ஐ.ஐ.டி., (டில்லி, ரூர்கே, கான்பூர், காரக்பூர்)இந்தியா.
யூனிவர்சிட்டி ஆஃப் ஹம்பர்க், ஜெர்மனி.
யூனிவர்சிட்டி ஆஃப் மிச்சிகன், அமெரிக்கா.
கெட்டரிங் யூனிவர்சிட்டி, அமெரிக்கா.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top