சிலாபம், மாரவில பிரதேசத்தில் பறக்கும் தட்டு ஒன்று நேற்றிரவு தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மாரவில கடற்பரப்பில் பறக்கும் தட்டொன்று வீழ்ந்த்தாக வெளியான தகவல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரவு 7.30 அளவில் கடற் பரப்பில் ஒளியொன்று தென்படுவதனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
கடலுக்கு 100 மீற்றர் தொலைவில் நீண்ட நேரத்திற்கு இந்த ஒளி தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது, நீல நிறத்திலான ஒளியொன்று தென்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். எதிலிருந்து இந்த ஒளி தோன்றியது என்பதனை பொலிஸாரினாலும் கண்டறிய முடியவில்லை.
இந்த ஒளியை பார்வையிட பிரதேசத்தைச் சேர்ந்த பலர் ஒன்று கூடியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் 9 மணியளவில் இந்த ஒளி மின்குழில் ஒளி என தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் ஒளி கடலில் விழுந்துள்ளமை எவ்வாறு என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.