.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 29 November 2013

முடிவெடுத்தல்!

முடிவெடுத்தல் என்பது உயிர் வாழும் கடைசி நிமிடம் வரை நடக்கும் ஒன்று. எந்த விஷயத்திலும் முடிவெடுத்தல் என்பது முன் அனுபவத்தின் அடிப்படையில் தான். வாழ்வின் முன்னேற்றத்திற்கும்,தடுமாற்றத்திற்கும் முடிவெடுத்தாலே காரணம். ஒவ்வொரு முடிவும் சரியென்று கருதியே எடுக்கப்படுகிறது. சில சரியாக அமைவதும் சிலவற்றில் பிரச்சனைகள் உருவாவதும் வேறு பல விஷயங்களில் பாதிப்பினால்.

முடிவெடுப்பது என்பது செயல் சார்ந்த விஷயம். முடிவெடுத்தல் என்ற சொல்லுக்கு சில காரணங்கள் எப்போதுமே தேவைப்படும். காரணமேயில்லாமல் ஒரு முடிவெடுக்க முடியாது. நாம் கற்றவையே நம் முடிவேடுத்தலின் பெரும் பங்கு வகிக்கிறது. கற்றவை தவிர, முடிவெடுக்க உதவும் இன்னொரு விஷயம் நம் ஆளுமை! ஆளுமை என்பது வெறும் குணங்களின் கூட்டுத்தொகை அல்ல, செயல்பாடுகளின் நிர்ணயமும் கூட. நம் ஆளுமை குறித்து தெரிந்துக் கொண்டால் பிறகு நாம் ஏன் முடிவெடுக்கிறோம்,எப்படி முடிவெடுக்கிறோம் என்பது நமக்கே விளங்கிவிடும்.

சிலருக்கு அவ்வளவு சிக்கிரம் முடிவெடுக்க முடியாது. இன்னும் சிலர் ஒரு விநாடியிலே முடிவெடுப்பார். நாம் முடிவெடுப்பதை பற்றி சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மற்றவருக்காக என்பதை விட முடிவு நமக்காக முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து, நேற்று எடுத்த தவறான முடிவு குறித்து கோபமோ வருத்தமோ வளர்க்காமல்,நேற்றைய முட்டாள்தனம் கண்டு சிரிக்க பழக வேண்டும். பிறகு நாம் முடிவெடுத்த பின்பு ஒருபோதும் பின்வாங்குதல் கூடாது.

எப்போதும் நாம் பிறருக்காக என்ற போர்வையை போர்த்தி கொள்கிறோமே தவிர,உள்ளே நாம் மனதின் கண்ணாடியில் தெரியும் நம்மை நாம் அடையாளம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு நாம் நம்மிடமே பொய் சொல்லக்கூடாது என்ற முடிவெடுக்க வேண்டும். இதன்பின் வாழ்க்கை சுலபமாகும்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top