இன்றைய மார்க்கெட்டில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களில் நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன. எனவே அதை பெண்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது அவர்களின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.
இம்மையம் நடத்திய ஆய்வில் உலக அளவிலும், தேசிய அளவிலும் புகழ்பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான முக அழகு க்ரீமில் அதிக அளவு பாதரசமும், சில வகை லிப்ஸ்டிக்கில் எஃகும் கலந்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது. இந்த அதிகளவு பாதரசம் சிறுநீரகத்தை பாதிக்கவும், தோலின் நிறம் மாறும் வகையிலும், அதில் வடுக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகு சாதனப்பொருட்களில் பாதரசம் பயன்படுத்தப்படுவதற்கு தடை உள்ள போதிலும், ஆய்வு செய்யப்பட்ட 32 முக அழகு க்ரீம்களில் 44 சதவிகித நிறுவனங்களின் தயாரிப்பில் பாதரசம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதே போல் 30 லிப்ஸ்டிக் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் 50 சதவிகித நிறுவனங்களின் தயாரிப்பில் எஃகு கலந்திருப்பது தெரியவந்தள்ளது.எனவே பெண்கள் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என இம்மையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டை பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மறுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.