.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 15 October 2013

டைபாய்ட் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறை!



டைபாய்ட் காய்ச்சலைப் பரவும் கிருமி மனித உடலில் ஒரு முறை நுழைந்து விட்டால் அது நிரந்தரமாக மனிதக் குடலில் ஒட்டிக் கொள்கிறது.


மிகக் கடுமையான காய்ச்சலை கொடுக்கும் டைபாய்ட் கிருமியிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகளைக் கையாள வேண்டும்.


அதற்கு, பாதுகாக்கப்பட்ட உணவு மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே உண்ண வேண்டும்.


நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை மட்டுமே பருக வேண்டும்.


சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும்.


எந்த பழங்களையும் கழுவாமல் சாப்பிடக் கூடாது.


டைபாய்ட் காய்ச்சலுக்கு என்று இருக்கும் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை போட்டுக் கொள்ள வேண்டும்.


சாலையோரம் விற்கப்படும் குளிர்பானங்களில் ஐஸ் கட்டிகளை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.

மிக உயர்ந்த தொட்ட பெட்டா சிகரம் - சுற்றுலாத்தலங்கள்!

தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் என்றும், தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மலை என்றும் கூறப்படுகிறது தொட்ட பெட்டா. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் உள்ளது தொட்ட பெட்டா மலை. இது மிக அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட மலையாகும்.


இது தமிழக அரசின் சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊட்டியில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்ட பெட்டா மலை அமைந்துள்ளது. இந்த மலையில் இருந்து சாமுண்டி மலை அழகாகக் கண்டு ரசிக்கலாம்.


 சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் தொட்டபெட்டா, காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்கும். பின்னர் மூடப்படும். இங்கு ஏராளமான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. அங்கு செல்லும் தமிழக சுற்றுலாப் பயணிகளில் பலரும், அந்த படம் இங்கு எடுக்கப்பட்டது, இந்த பாடல் காட்சி இங்குதான் எடுத்துள்ளார்கள் என்ற வசனத்தை தவறாமல் கூறுவார்கள்.


நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொட்ட பெட்டா மலைக்கு கன்னடத்தில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது தொட்ட என்றால் பெரிய என்றும், பெட்டா என்றால் மலை என்றும் கன்னடத்தில் பொருள் கூறுவர். அதன் அடிப்படையிலேயே இந்த பெரிய மலைக்கு தொட்டபெட்டா என்று பெயர் வந்துள்ளது.


ஆனால், இந்த மலை சங்க காலத்தில் தோட்டி மலை என்று அழைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இந்த மலையின் பெயர் நளிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ஊட்டியில் இருந்து சாலை வழியாக தொட்ட பெட்டா செல்லலாம். போகும் வழி எங்கும் பச்சை பசேலென்று இயற்கைக் காட்சிகள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். தொட்ட பெட்டா மலையின் ஒரு பகுதி வரையில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதன் பிறகு சற்று குறுகலான பாதையில் நடந்து செல்ல வேண்டும்.


தொட்ட பெட்டா மலையில் வாகனத்தில் செல்லும் போது வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேப்போல, தொட்ட பெட்டா மலையின் மீதும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு ஏப்ரல் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை சுற்றுலா செல்ல உகந்த காலங்களாகும்.


அங்கிருந்து இயற்கை அழகைக் கண்டு ரசிக்க இரண்டு தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தின் முழு அழகையும் இந்த தொலைநோக்கிகள் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. சுற்றுலா சீசன் நேரத்தில் ஒரு நாளைக்கு சுமார் 4000 பேர் வரை இந்த தொலைநோக்கி வழியாக நீலகிரியை கண்டு களிப்பார்கள் .


தொட்டபெட்டா சிகரத்தின் மேல் ஒரு அழகான பூங்காவும் சுற்றுலாத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளும், இளசுகளும் பார்த்து மகிழ ஏற்ற இடமாக அது உள்ளது. புகைப்பட பிரியர்களுக்கு ஏற்ற இடமும் கூட.


வாகனத்தில் இருந்து இறங்கி நடக்கும் பாதையில் சில கடைகளும் ஆங்காங்கே முளைத்துள்ளன. பச்சைக் காய்கறி முதல் சூடான பஜ்ஜி வரை அங்கு கிடைக்கின்றன.


குளிர் காலங்களில் ஊட்டியை விட இங்கு மிக அதிகமாக குளிர் நிலவுகிறது. எனவே, இங்கு கால நேரத்தில் சுற்றுலா செல்ல புறப்படுவோர் மறக்காமல் சுவெட்டரைக் கொண்டு செல்வது நல்லது.

ரூ.8 கோடி செலவில் வண்டலூரில் சைக்கிள் ரேஸ் உள் விளையாட்டரங்கம்!


 


சைக்கிள் ரேஸ் பிரியர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி... சென்னையில் முதல் முறையாக சைக்கிள் ரேஸ் உள்விளையாட்டரங்கம் கட்டப்பட உள்ளது. இந்த விளையாட்டரங்கத்துக்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.நகரின் மையப்பகுதியில் இந்த விளையாட்டு அரங்கம் அமைய வேண்டுமென்பதற்காக செனாய் நகர் திருவிக பூங்கா அருகே ஒரு இடத்தை தேர்வு செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) கோரிக்கை வைத்தது.

 

இந்த இடத்தையும், வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தையும் மாநகராட்சி ஆய்வு செய்தது.
இறுதியில், வண்டலூரில் சைக்கிள் ரேஸ் உள்விளையாட்டரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:


செனாய் நகரில் நிலத்தின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது. அந்த இடத்தை வருவாய் அதிகமாக கிடைக்கும் வேறு பணிக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதனால், சைக்கிள் ரேஸ் உள்விளையாட்டரங்கை வண்டலூரில் அமைக்க முடிவு செய்துள்ளோம்.


இதன் திட்ட மதிப்பீடு ரூ.8 கோடி. கட்டுமானப்பணிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கும். சுமார் ஆறரை ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த அரங்கில் வீரர், வீராங்கனைகள் பயிற்சி செய்ய தனி தளம், போட்டிகள் நடத்துவதற்கான தளம் என சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது. பணிகள் தொடங்கி ஓராண்டில் நிறைவு பெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏரியாவில் பவர் கட்டா...? உடனே டயல் பண்ணுங்க!




கால் சென்டர் நம்பர்    155333    9445850829

பெல்ஸ் ரோடு    25361336    9445850782

பூக்கடை பஜார்    25340708    9445850783

உயர் நீதிமன்றம்    25341964    9445850784

புதுப்பேட்டை    28451469    9445850785

நுங்கம்பாக்கம்    28330162    9445850786

மயிலாப்பூர்        28112526    9445850787

ராயப்பேட்டை    28419823    9445850788

மந்தைவெளி    24941134    9445850789

எழும்பூர்        26618008    9445850790

கீழ்ப்பாக்கம்        26413312    9445850791

ஓட்டேரி        26622168    9445850792

சவுகார்பேட்டை    25268855    9445850793

புளியந்தோப்பு    26670066    9445850794

மாம்பலம்        24341052    9445850795

சைதாப்பேட்டை    24341898    9445850796

ஆர்ஏ புரம்        24937383    9445850797

மேற்கு மாம்பலம்    24896754    9445850767

தேனாம்பேட்டை    24351295    9445850777

தண்டையார்பேட்டை    25951156    9445850974

எண்ணூர்        25750247    9445850975

சுங்கச்சாவடி    25910120    9445850976

திருவொற்றியூர்    25990619    9445850977

கொருக்குப்பேட்டை    25921581    9445850978

செம்பியம்        25375393    9445850979

வில்லிவாக்கம்    26262971    9445850980

பெரம்பூர்        25508050    9445850981

அண்ணாநகர் மேற்கு    26162800    9445850377

அண்ணாநகர்    26214427    9445850379

செனாய் நகர்    26262017    9445850380

அரும்பாக்கம்    23631714    9445850381

கோயம்பேடு    24799191    9445850383

மதுரவாயல்    23781659    9445850388

சேத்துப்பட்டு    26414398    9445850389

முகப்பேர்        26565002    9445850390

அம்பத்தூர்        26242004    9445850393

அம்பத்தூர் எஸ்டேட்    26251224    9445850395

ஆவடி        26384010    9445850399

அடையார்        24913001    9445850438

வேளச்சேரி        22450001    9445850439

இந்திரா நகர்    24919382    9445850440

ஆலந்தூர்        22321755    9445850441

கிண்டி        22500300    9445850442

நங்கநல்லூர்    22242843    9445850443

கேகேநகர்        24713988    9445850434

சூளைமேடு        24838750    9445850435

அசோக் நகர்    23662672    9445850436

வளசரவாக்கம்    24860694    9445850437

பல்லாவரம்        22640603    9445850446

தாம்பரம்        22266200    9445850448

போரூர்        24826554    9445850445

கொசு உற்பத்திக்கு காரணமானவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் அபராதம் வசூல்!


சென்னையில் எந்த ஏரியாவில் பார்த்தாலும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வீடு, கடைகள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள் என புதிய புதிய கட்டிடங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கட்டுமான பணி நடைபெறும் இடங்கள் சுகாதாரமாக இருப்பதில்லை.


சாலையில் கழிவுநீர் தேங்குதல், தேவையற்ற டயர், பைப் உள்ளிட்ட உபகரணங்களை சாலையிலேயே போட்டு வைப்பது, கட்டுமான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது என கட்டுமானப்பணி நடக்கும் இடங்களால் சுற்றுப்புறப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக, கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. கொசுக்களால் மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.


இதனால், சுகாதாரமற்ற முறையில் கட்டுமான பணி மேற்கொள்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அறிவித்தது. கட்டுமானப்பணி நடக்கும் இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் பணியிடத்தை மோசமாக வைத்திருக்கிறார்களா என சோதனை செய்தனர். சுகாதாரமற்ற வகையில் பணியிடத்தை வைத்திருந்தவர்களிடமிருந்து இதுவரை ரூ.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


‘கட்டிடத்தின் அளவுக்கு ஏற்றாற் போல் அபராதம் மாறுபடும். குறைந்தபட்சம் ரூ.60,000லிருந்து ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுவரை 1,600 கட்டுமான பணியிடங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இது தொடர்பாக இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கழக உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். மாநகராட்சி விதிப்படி, அனைத்து கட்டுமான இடங்களும் இருக்க வேண்டுமென அவர்களிடம் வலியுறுத்த உள்ளோம். மாநகராட்சியின் இந்த சோதனை தொடரும்’ என்கின்றனர் அதிகாரிகள்.உங்கள் ஏரியாவில், கட்டுமான பணி நடக்கும் இடம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் மாநகராட்சியின் இலவச புகார் எண் 1913க்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top