.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 8 October 2013

கொசுக்கள் ஏன் சிலரை மட்டுமே அதிகமாகக் கடிக்கின்றன?


 


சாதாரணமாக நம்மைக் கடிப்பது பெண் கொசுக்கள்தான். அவை யாரைக் கடிக்க வேண்டும் என்பதைப் பார்வை, மோப்ப சக்தி மூலம் கண்டறிகின்றன. 


அவற்றின் உணர்கொம்புகள் மூலம் 72 வகையான மணங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். இந்த 72 வகையான மணங்களில் 27 வேதிப்பொருள்கள் நமது வியர்வையில் இருப்பவை. 


நமது வியர்வையில் இருக்கும் அப்படிப்பட்ட வேதிப் பொருள்களில் கார்பன் டை ஆக்சைடு, ஆக்டனால், நோனனால் போன்றவை அடங்கும். 


ஒருவரது வியர்வையில் இந்த வேதிப்பொருள்களின் அடர்த்தி அதிகமாக இருந்தால், கொசுக்கள் அவர்களைக் குறி வைத்துக் கடிக்கின்றன. 


எனவே, இனிமேல் கொசு உங்களை அதிகமாகக் கடித்தால், அதற்குக் காரணம் என்ன என்று தேடாதீர்கள். எல்லாம் உங்கள் வியர்வையில் இருக்கிறது. 


வியர்வை வருவதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால், தற்போது மேலே சொன்ன வேதிப்பொருள்கள் வெளியே தெரியாத வண்ணம் மறைக்கும் வகையில் பூச்சித் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பது பற்றி ஆராய்ச்சி நடந்துவருகிறது.


 சீக்கிரம் கண்டுபிடித்தால், கொசுக் கடியில் இருந்து நாமும் சீக்கிரமாகத் தப்பிக்கலாம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top