கடந்த ஆண்டு ‘நீலம்’ புயல் மகாலிபுரம் அருகே கரையை கடந்த போது.தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டதை இன்னமும் முழுமையாக சரி செய்ய வில்லை.இந்நிலையில் தற்போது அந்தமான்– நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த புதிய புயல், கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்திய மெட்ரோலாஜிக்கல் வெப்சைட்டில் அப்டேட் செய்யப்பட்டுள்ள விவரத்தில் “ஆந்திராவை ஒட்டி இந்த தீவுப்பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதாகவும், இது இன்னும் 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் , இதற்கு சூப்பர் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் நேரத்தில் இந்த கடல் சீற்றம் கடுமையாக இருக்கும். ராட்சத அலைகள் இருக்கும். இந்த புயல் கடந்த ஆண்டு அக்டோபரில் தாக்கிய நீலம் புயலை விட கொடியதாக இருக்கும் என்று யூகிக்கப்பட்டுள்ளது. வலுவடைவதை பொறுத்து, கடுமையாகவும், மிகக்கடுமையாகவும், புயல் இருக்கும். இந்த புயலால் சென்னையை யொட்டிய பகுதிகள் மற்றும் தென் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது.
இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர் வலுவிழக்கும். இதன் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா, தமிழகம் பகுதியில் லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும். ஆந்திராவில் இதன் தாக்கம் காரணமாக 4 நாட்கள் பெரிய மழை இருக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வரும் 15 ம் தேதிக்கு மேல் வடமேற்கு பருவ மழை துவங்க வேண்டிய காலத்தில் இருப்பதால் தற்போதைய புயல் காரணமாக வழக்கமான மழைக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிய வருகிறது.