நமது சூரிய குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் உள்பட 8 கிரங்கள் உள்ளன. ஒரு சில கிரங்களைச் சற்றி துணக்கோள்களும் (நிலவு) இயங்குகின்றன.
இவற்றை தவிர ஏராளமான விண்கற்களும் சூழன்று வருகின்றன. இவற்றில் சில வால் நட்சத்திரங்களைப் போன்று தோன்றும் அந்த வகையில் ஐசான் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் , நவம்பா் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் காட்சியளிக்க உள்ளது.
இந்த வால்நட்சத்திரம் வினாடிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இது பூமியை நோக்கி நெருங்கி வருகிறது.
குறிப்பாக தென்னிந்திய பகுதியை நோக்கி வருவதால் இப்பகுதி மக்கள் இதை காண முடியும். 2 நாட்களிலும் மாலை 5 மணியளவில் இந்த நட்சத்திரம் காட்சியளிக்கத் தோன்றும்.
மேகக் கூட்டங்களில் காண்பது கடினம். ஆகவே, சென்னை அறிவியல் மையத்தில் இதை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.