.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 17 November 2013

அரிப்பு நோயை தடுக்க நாட்டு வைத்தியம்!

கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவதால், ஒருவேளை இன்னும் அதிகமாக கொசுக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற்சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பிக்கிறோம்.

உடனடியாக அரிப்பிலிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் சருமத்தில் அரிப்பு அதிகமாகி இரத்தம் வரும் வரை சொரியும் சமயத்தில், அழுக்கான விரல் நகங்களால் சருமத்தில் கீறல் ஏற்பட்டு, நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து உருவாகும்.

ஆகவே கொசு கடிக்கும் போது, எரிச்சலை உண்டாக்கும் அரிப்பிலிருந்து விடுதலை பெற இதோ சில ஆரோக்கியமான வழி முறைகள் உள்ளன. இவை அதிகமாக நாட்டு மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகின்ற நாட்டு வைத்தியக் குறிப்புகள் ஆகும்.

இவற்றில் அறிவியல் ரீதியான ஆதாரங்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பலரும் பயனடைந்துள்ளனர். ஆகவே கொசுக்கடியால் அவஸ்தைப்படுவதற்குப் பதிலாக, இவற்றை பின்பற்றுவதன் மூலம் சுகம் பெறலாம்.

ஆல்கஹால் :

பீர் அல்லது மற்ற மதுவை அருந்துவதால், சருமத்தில் ஏற்படும் அரிப்பை மறந்து விடலாம். ஆனால் இந்த வகையான ஆல்கஹாலைப் பற்றி இங்கு பேசவில்லை. முதலுதவி பெட்டியிலிருந்து கொஞ்சம் ஆல்கஹாலை எடுத்து, கொசுக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்து சுத்தம் செய்வதால், அரிப்புத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற முடியும். ஒருவேளை ஆல்கஹால் இல்லாவிட்டால், சோப்புத் தண்ணீரால் கழுவுவதன் மூலம் பயன் பெற முடியும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ஆன்டி இச், ஆன்டிபயோட்டிக் மற்றும் ஆன்டிமைக்ரோபயல் ஆகும். ஆகவே எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம், அரிப்பைக் குறைத்து தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இதை வீட்டின் உள்ளே பயன்படுத்துங்கள். ஏனென்றால் இதனை தேய்த்துக் கொண்டு, வெயிலில் சென்றால், சூரியக்கதிர்களின் தாக்கத்தால், சருமத்தில் புண்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு.

ஐஸ் கட்டி :

சரும அரிப்பு காரணமாக ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் சரும மதப்பு தன்மையைக் குறைப்பதற்கு ஐஸ் கட்டி பெரிதும் உதவும். அதிலும் கொசுக்கடி அதிகமாக இருக்கும் சமயத்தில், மிகவும் குளிர்ச்சியான தண்ணீரில் குளியுங்கள் அல்லது குளிர்ச்சி நிறைந்த தண்ணீருள்ள குளத்தில் மூழ்கிக் குளியுங்கள்.

பேக்கிங் சோடா மற்றும் விட்ச் ஹாசில் :

செலவில்லாத கொசுக்கடித் தீர்வுக்கு, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் செய்து, கொசுக்கடி ஏற்பட்ட பகுதியில் தடவி, 15 நிமிடங்கள் உலர விடவும். இதனால் பேக்கிங் சோடாவில் உள்ள ஒரு காரத்தன்மையான (அல்கலைன்) பதார்த்தம் இருப்பதால், இது சருமத்தின் பிஎச் அளவை நடுநிலைப்படுத்த உதவி, வீக்கம் குறைய வாய்ப்புண்டு. விட்ச் ஹாசில் கிடைக்காவிட்டால், அதற்குப் பதிலாக தண்ணீர் பயன்படுத்தலாம்.

டீட்ரீ ஆயில் :


இது வீக்கத்தைக் குறைக்கும் ஒரு இயற்கை மருந்து என்பதால், பரு மற்றும் சருமத்தில் ஏற்படும் நச்சுப் படலம் ஆகியவற்றுக்கு சிறந்தது. அதிலும் சொரிவதால் ஏற்படக்கூடிய வீக்கத்தைக் குறைப்பதற்கும், நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கும் இந்த எண்ணெய் உதவும்.

டூத் பேஸ்ட் :

கொசுக்கடியால் சருமத்தில் சிறு சிறு வெள்ளைக் கொப்புளங்கள் ஏற்பட்டால், அதன் மீது கொஞ்சம் டூத் பேஸ்ட் தடவுங்கள். இதனால் அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

உப்பு :

கொசுக்கடியிலிருந்து சீக்கிரம் நிவாரணம் பெறுவதற்கு, உப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக தடவுங்கள். அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை கடற்கரைக்கு அருகில் இருந்தால், உப்பு நீரில் நீச்சலடியுங்கள், சிறந்த பலனைப் பெறுவீர்கள்.

கற்றாழை :

சொரியும் போது சருமத்தில் கீறல்கள் ஏற்பட்டு வலி உண்டாகும். ஆனால் கற்றாழையில் உள்ள குளிர்விக்கும் தன்மை, இந்த வேதனையிலிருந்து சுகம் பெற உதவும்.

ஆப்பிள் சீடர் வினிகர் :

குளியல் தொட்டி நீரில், சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குளிப்பதால், வெயிலால் ஏற்படும் எரிச்சல் குறைவது மட்டுமன்றி, இதில் இருக்கும் ஒருவகை ஆசிட் சரும அரிப்பைத் தணிப்பதற்கும் வழி செய்யும். ஒருவேளை தண்ணீரில் கலந்து குளிக்க முடியாவிட்டால், ஒரு காட்டன் உருண்டையில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக தடவுவதால் பயன் பெறுவீர்கள்.

வாழைப்பழத் தோல் : 


வாழைப்பழத் தோலில் உள்ள இனிப்புப் பகுதி கொசுக்கடியிலிருந்து நிவாரணம் பெற உதவும். எனவே வாழைப்பழத் தோலின் உள் பகுதியை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்ப்பதால் சுகம் பெறுவீர்கள்.

எச்சில் :

விரலில் சிறிது எச்சிலைத் தொட்டு, அதை கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் லேசாக தடவி உலரவிட்டாலும் சுகம் கிடைக்கும்.

உள்ளங்கையால் லேசாக அடித்தல் :

இது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றலாம். ஆனால், கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் லேசாக அடிக்கும் போது, மூளை நரம்புகளுக்கு வலி எது? அரிப்பு எது? என்ற குழப்பம் ஏற்படுவதால், அரிப்பிலிருத்து சுகம் பெற முடியும்.

அரிப்பு நோய் என்பது சராசரி வாழ் மனிதனை பாடாய் படுத்திவிடும். அதற்கு தகுந்த மருத்துவம் பார்க்காமல் இருந்து விட்டால் பக்க விளைவுகள் நம்மையே அழிக்கும் நிலைமைக்கும் கொண்டுபோய் விடும். அத்துடன் அரிப்பு நோயானது தன்னம்பிக்கையையும் குறைத்துவிடும்.

மருந்தில்லா மருத்துவம் என்பது போல் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களை (மேற் கூறப்பட்டவை) தகுந்த அளவு முறையாக பயன்படுத்தி வந்தாலே அரிப்பு நோயில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top