.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 17 November 2013

மனைவியை வசீகரிக்கும் பரிசு!

மனைவிக்கு, கணவர் பரிசுகள் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மனைவிக்கு மனப்பூர்வமாக தரும் பரிசுகள் மரியாதைக்குரியதாகவும், நேசிப்பின் சின்னமாகவும் என்றும் அவள் நினைவில் நிறைந்திருக்கும்.

அந்த பரிசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?
- உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக இருக்கலாம்.

- நேரடியாக உபயோகம் இல்லாவிட்டாலும், அழகான பொருளாகவும் இருக்கலாம்.
மனைவிக்கு தேவையான உபயோகப் பொருளை வாங்கிக்கொடுத்தால், அதை உபயோகப் படுத்தும்போதும் கணவரின் நினைவுவரும். அதனால் மனைவி எப்போதும் தன்னை நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் கணவர்கள், அவள் அடிக்கடி பயன்படுத்தும் செல்போனை பரிசாக வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். ஆனால் அடிக்கடி உபயோகப் படுத்தும் பொருட்கள் சீக்கிரமே பழையதாகி, நாளடைவில் செயலற்றதாக ஆகி விடும். அதனால் தான் வாங்கிக்கொடுக் கும் பரிசு, செயலற்றதாகவே ஆகக்கூடாது என்று கருதும் கணவர்கள், கலைப் பொருட்களை வாங்கி பரிசாக வழங்கி விடுகிறார்கள். அழகான அந்த பொருட்கள் எப்போதும் கணவரை பளிச்சென நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.

மனைவியை மகிழ்வித்துப் பார்ப்பதுதான் தங்கள் கொள்கை என்று நினைக்கும் கணவர் கள் அழகிய புடவையோ, நகையோ பரிச ளித்து நல்ல பெயர் வாங்கி விடுகிறார்கள்.

பரிசுகள், திருமண பந்தத்தை கவுரவித்து மரி யாதை செலுத்துவதாக இருக்கிறது. மனைவிக்கு முதன் முதலாக கொடுக்கப்படும் பரிசுகள் இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து, நீண்ட நாட்கள் மகிழ்விக்கும் தன்மை கொண்டது. இந்த பரிசுகளை சம்பிரதாயமானது, சராசரி யானது என்று இரண்டு வகையாகப் பிரிக் கலாம்.

சம்பிரதாய ரீதியாக தரப்படும் பரிசுகள் விலை உயர்ந்ததாகவும், குடும்ப கவுரவத்தை வெளிப் படுத்தும் அம்சமாகவும் இருக்கும். அந்த பரிசுகள் தொடக்கத்தில் அதிக ஆச்சரியத் தையும், மகிழ்ச்சியையும் தந்தாலும், அந்த பரம்பரை பரிசுகளை பாதுகாக்கும் பெட்டகம் மாதிரியே அந்த பெண் ஆகிப்போவாள். அந்த பரிசுகளும் பெரும்பாலும் அந்த பெண்ணால் தனிப்பட்ட முறையில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்காது. சம்பிர தாய பரிசுகள் பெரும்பாலும் பெட்டகத்தில் வைத்து பூட்டக் கூடியதாகத்தான் இருக்கும். சம்பிரதாயம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் தரப்படும் பரிசுகள், பயன்பாட்டு அடிப் படையில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சம்பிரதாய பரிசு எப்போதாவது ஒருசில முறை தான் கிடைக்கும். தனிப்பட்ட பரிசுகள் அடிக்கடி கிடைக்கும். அதனால் இந்த தனிப்பட்ட பரிசுகள் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகம். அடிக்கடி அவர்களை சிரிக்கவைக்க இந்த பரிசுகள் உதவும்.

வாழ்க்கையின் வெகுதூரத்தை கடந்த பிறகும் மலரும் நினைவுகளாக, பல பரிசு பொருட்கள் நிலைத்து நிற்கின்றன. பெரும்பாலான நேரங்களில் சாதாரண பரிசு பொருட்கள் கூட, காலங்கடந்து நின்று பெண்களை மகிழ்ச்சியடையச் செய்யும். மிகப்பெரிய பரிசுகள் கிடைத்தபின்பும், அந்த சாதாரண பரிசுகள் பெண்கள் மனதில் நிலைத்து நிற்பதும் உண்டு.

சில பரிசுகள் என்ன பரிசு என்பதைவிட, யார் கொடுத்தது என்பதைவைத்து சிறப்பு பெறும். பிற்காலத்தில் ஏற்படும் சில கசப்பான நினைவுகளை மாற்றியமைக்கும் ஆற்றல்கூட அந்த பரிசுகளுக்கு உண்டு.

முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே பெண்களுக்கு பரிசுகளை கொடுத்துக்கொண்டிருந் தார்கள். பெண்கள் உழைப்பதில்லை என்பதால் அந்த நிலை. இப்போது பெண்கள், ஆண்களைவிட அதிகம் சம்பாதிக்கும் நிலை இருந்துகொண்டிருக்கிறது. அதனால் ஆண் களுக்கு நிகராக பெண்களும் அன்புப் பரிசுகளை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பழைய காலத்தில் பெரிய பெரிய சமஸ்தானங்களில்கூட மனைவிக்கு பரிசு கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. மன்னர் ஒருவர் தன் மனைவிக்கு அன்னப்பறவையின் இறகை பரிசாக கொடுத்தார். வியந்து போன அரசி, அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கையில், “இதை நீ எத்தனை காலம் பத்திரமாக வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்துத்தான் என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் புரிந்து கொள்வேன்” என்றார். அரசி அதனை வாழ்நாள் முழுவதும் தங்கப் பேழையில் வைத்துப் பாதுகாத்தார். அன்னப் பறவையின் இறகு என்பது அந்த காலத்தில் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அந்த மெல்லிய இறகில் அந்த மன்னர் தன் அன்பையும் கலந்துவிட்டதால் அது தங்க பேழைக்கு செல்லும் உயர்ந்த பரிசாகிவிட்டது. நீங்கள் உங்கள் மனைவிக்கு வழங்கும் பரிசும் அன்பு கலந்ததாக இருக்கட்டும். அவள் அதை தங்க பேழை போன்ற தன் மனதுக்குள் வைத்து பாது காப்பாள். அதன் மூலம் உங்கள் ஆத்மார்த்த உறவு மேம்படும்.

வங்காளதேசத்து மீனவர் ஒருவர் தன் மனைவிக்கு வெண் சங்கு ஒன்றை அன்பு பரிசாக அளித்தார். அதை பத்திரமாக வெகுகாலம் பாதுகாத்து வந்தாள் மனைவி. மனைவி இறக்கும் தருவாயில் மீனவர் அந்த வெண் சங்கை வீடு முழுவதும் தேடினார். எங்கும் கிடைக்காமல் போகவே, மனைவியிடம் வந்து நான் கொடுத்த அன்பு பரிசை தொலைத்து விட்டாயா என்று கேட்டார். அவளோ தொலைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அதில் வளையல் செய்து கைகளில் அணிந்திருக்கிறேன் இதோ பாருங்கள் என்றாள்.

அன்றிலிருந்து வங்காளதேசத்தில் மணமகளுக்கு மணமகன் வெண் சங்கு வளையல் அணிவிக்கும் வழக்கம் உருவானது. இன்றும் அது தொடர்கிறது!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top