.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 31 October 2013

பென்சில் நதி!

பென்சில் நதி

நதி பற்றிய கவிதையை
 
நான் எழுதியபோது
 
அருகில் வந்த மகள்
 
வரைந்த நதியைக் காட்டினாள்
 
தாளில் ஓடியது
 
பென்சில் நதி
 
என் கவிதையை
 
அதில் கரைத்துவிட்டு
 
மறுபடி பார்க்க
 
இன்னும் முடியவில்லை
 
எனச் சொல்லியபடியே
 
ஓடிய அவள்
 
கண்களில் மீதி நதி
 
*****************

டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் 41 மெகாபிக்சல் நோக்கியா மொபைல்!

10-1381383739-09-1381310659-procamera
 
நோக்கியா நிறுவனம் அண்மையாக 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது என்பது பெரும்பாலோனோருக்கு தெரியும். நோக்கியா லூமியா 1020 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் ஆன்லைன் விற்பனையும் சிறப்பாக நடந்து வருகிறது. நோக்கியா லூமியா 1020 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் கேமரா தான் விளங்குகிறது, டிஜிட்டல் கேமராக்களையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா திறன் உள்ளது. 
 
 
இதை பற்றி பார்ப்பதற்க்கு முன் இந்க போனின் மற்ற சிறப்பம்சங்களை பார்ப்போம். 4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன் வின்டோஸ் 8 ஓஎஸ் 1.5 GHz டியுல் கோர் பிராசஸர் 41 மெகாபிக்சல் கேமரா 1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா 2ஜிபி ராம்(RAM) 32ஜிபி மெமரி 7ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் 3ஜி,4ஜி wi-fi 158 கிராம் 10.4mm 2000mAh பேட்டரி டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போன் எந்த அளவிற்க்கு படங்களை தெளிவாக பிடிக்கிறது, இதன் கேமராவின் சிறப்பு என்ன என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
 
 10-1381384330-25-1380109961-4copy

நோக்கியா லூமியா 1020 நோக்கியா லூமியா 1020யில் ஒரு போட்டோவை நீங்கள் பல பரிமாணங்களில் எடிட் செய்யலாம்.
 
 
10-1381384251-25-1380109932-2copy 
 
 
நோக்கியா லூமியா 1020 நோக்கியா லூமியா 1020யில் நீங்கள் தெளிவான ஹச்டி வீடியோக்களை படம் பிடிக்கலாம்.
 
 
10-1381383995-09-1381311077-nokialumia1020-5 
 
 
நோக்கியா லூமியா 1020 இருட்டில் எடுக்கப்பட்ட போட்டோவில் நீங்கள் பிரைட்னஸ்யை கூட்டினால் எவ்வளவு வெளிச்சமாக தெளிவாக தெரிகிறது என்பதை பாருங்கள்.

மழைக்குறிப்புகள்!

மழைக்குறிப்புகள்

 
> வீட்டு முற்றத்தில்
 
> தேங்கிய மழைநீரில்
 
> விளையாட
 
> கத்திக்கப்பல் செய்து தாவென
 
> ந‌ச்ச‌ரிக்கிறாள் ம‌து
 
 > பழசின் அதிர்வுக‌‌ள் உறுத்த
 
> வேண்டும‌ட்டும் செய்துத‌ருகிறேன்
 
> தெறித்த ம‌ழையின்துளிக்கு
 
> மூழ்கிய க‌ப்ப‌லின் சோக‌ம் அழுத்த
 
> வீரிட்டு அழுகிறாள்
 
> தேற்ற வ‌ழியின்றி த‌விக்குமென் நினைவுக‌ளில்
 
> உடைகிறது ஒரு
 
> சிறு குமிழி

நண்பா நீ என் வேர்!!

நண்பா நீ என் வேர்!!

இன்ப நொடிகளில்
 
கனவுக் காலங்களில்,
 
வெற்றித் தருணங்களில்
 
உன் நினைவுகள் வருவதே இல்லை
 
ஆனால் தோல்வியின் துயரத்தில்
 
மனம் விரிசல் காண்கையில்
 
வாழ்க்கை உலர்ந்து கிடக்கையில்
 
பற்றற்று மரமாகிப் போகையில்-தான்
 
உணர்ந்து கொள்கிறேன்
 
என் வேர் நீயென்று…

*************

கல்லா மனிதன் மனம்?

கல்லா மனிதன் மனம்?

ஏதோ நினைவுடன்
 
தனியே நடக்கையில்
 
 ரு கல்லில் கண்டேன்,
 
ஒற்றை இதழுடன் மஞசள் மலர்
 
குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்
 
யார் ஒப்பிட்டது
 
மனிதர் மனத்தைக் கல்லோடு………
 
**********

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top