மனிதர்கள் தமது உடலுக்குள் உள்ளெடுக்கும் பொருட்களை துல்லியமாகக் காட்டிக் கொடுப்பதற்கு இலத்திரனியல் மாத்திரை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சாதாரண மாத்திரைகளைப் போன்று இதனையும் உள்ளெடுக்க வேண்டும்.
அவ்வாறு உள்ளே சென்று குடலின் அடிப்பகுதியில் தங்கிக் கொள்ளும்.
அதன் பின்னர் ஒவ்வொரு தடவையும் வாய்மூலம் உள்ளெடுக்கப்படும் பொருட்களை துல்லியமாக அறிந்து உங்கள் ஸ்மார்ட் செல்பேசிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கும்.
இதில் பொருத்தப்பட்டுள்ள விசேட சென்சார் ஆனது ஈரலிப்பாகும்போது தகவல்களை கையில் பொருத்தப்பட்டிருக்கும் விசேட சாதனத்திற்கு அனுப்புகின்றது.
பின்னர் அங்கிருந்து ஸ்மார்ட் கைப்பேசிக்கு தகவலை அனுப்பிவிடுகின்றது.
இதனால் வைத்தியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது நோயாளிக்கு வழங்கப்பட்ட மாத்திரைகளை ஒழுங்காக உள்ளெடுக்கின்றாரா? என்பதனை பரிசோதிக்க முடிகின்றது.
இதுதவிர குழந்தைகள் அநாவசியமான பொருட்களை விழுங்கிவிட நேர்ந்தால் அப்பொருளினை கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.