நம் நணபருக்கு பிறந்தநாள் என்றால் எதாவது பரிசு கொடுப்போம்
ஆனால் அவர் வேறு எந்த நாட்டில் ஆவது இருந்தால் என்ன
செய்வோம் இமெயில் மூலம் எதாவது வாழ்த்து அட்டை
அனுப்புவோம். நம் நண்பர் எந்த நாட்டில் இருக்கிறாறோ அந்த
நாட்டின் பணத்தில் அவர் உருவம் பதித்து அனுப்பினால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.ஆனால் எனக்கு போட்டோ எடிட் செய்யும் எந்த
மென்பொருளும் தெரியாது என்கிறீர்களா ? , அல்லது தெரியும்
ஆனாலும் நேரம் இல்லை என்கிறீர்களா ? 5 நிமிடம் போதும்.
உங்களுக்காகவே ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.festisite.com/money/
இதை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
எந்த நாட்டின் பணத்தில் உங்கள் நண்பரின் புகைப்படம் சேர்க்க
வேண்டுமோ அந்த பணத்தை முதலில் தேர்வு செய்து கொள்ளவும்.
அடுத்து உங்கள் நண்பரின் புகைப்படத்தை தேர்வு செய்து அப்லோட்
செய்யவும்.ஒரு சில நிமிடங்களில் தேர்வு செய்த பணத்தில் உங்கள்
நண்பரின் புகைப்படம் வந்துவிடும். வலது , இடது , மேல், கீழ் என்று
அம்புக்குறியை அழுத்தி புகைப்படத்தை சரிசெய்து கொள்ளவும்.
+ என்ற பட்டன் மூலம் படத்தை பெரியதாக்கலாம். - என்ற பட்டன்
மூலம் படத்தை சிறியதாக்கலாம். எல்லாம் சரி செய்யபட்டவுடன்
” Finalize image “ என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் பகக்த்தில் படத்தின் மேல் “Right clik”
செய்து “Save Image” என்பதன் மூலம் சேமித்துக்கொள்ளவும்.
பின் உங்கள் நண்பருக்கு அனுப்புங்கள்.
உதாரணமாக நாம் நம் தேசதந்தை காந்திஜி-யின் படத்தை
அமெரிக்காவின் ஒன் மில்லியன் டாலர் நோட்டில் சேர்த்துள்ளோம்.
பொருத்தமாகவே உள்ளது. இதே போல் உங்கள் புகைப்படம்
அல்லது உங்கள் நண்பரின் புகைப்படத்தையும் வைத்து உருவாக்கலாம்.