என்னென்ன தேவை?
கீழாநெல்லி - 1 கட்டு (தண்டோடு),
தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 5,
பூண்டு - 6 பல்,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
கீழாநெல்லிக் கீரையை தண்டோடு நன்கு அலசி, நன்கு இடித்து, அதோடு பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு இடிக்கவும். அதோடு சின்ன வெங்காயத்தை நசுக்கிச் சேர்த்து, மிளகுத் தூள், சீரகத் தூள், உப்புப் போட்டு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி, நான்கு, ஐந்து விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும்.
பிறகு அதை எடுத்து நன்கு மசித்து, வடிகட்டி அதன் சாற்றைக் குடிக்கவும். தொட்டாலே கையோடு வரும் முடி உதிர்வுப் பிரச்னைக்கு இது மருந்து. உடலும் குளிர்ச்சி அடையும்.