.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label உண்மை!. Show all posts
Showing posts with label உண்மை!. Show all posts

Friday, 15 November 2013

சிகரட்கவி - கவிதை!

 சிகரட்கவி


கொடி இடையாள்,

குணத்தில் கொடூரமுடையாள்,

மணத்தில் நெடியுடையாள்..!,

இவளுக்கு பல பெயர்கள்..?

இவள் வசம் பலபேர்கள்..!

நெருப்பால் தன்னை எரித்து - நம்,

நெஞ்சயே எரித்து விடுகிறாள்..!!

தன்னைத் தொட்டவனை - இவள்

சும்மா விட்டதில்லை.!,

தொட்டவனுக்கு - இவள்,

இதயப்புகை வென்மையாக,

இருப்பினும் நம்பாதீர்கள்..?

நம் இதயம் கருத்துவிடும்..!,

கடையில் அது வாங்கினால்,

இது இலவசம் என்பதுபோல்,

இவளைத் தொட்டால்..?

ஆஸ்துமா முதல்...!

ஆண்மைக்குறைவு வரை இலவசம்..!

ஆண்டாண்டு காலமாய் - நம்மை,

ஆட்டிவைக்கும் - இவள் ஒரு,

நவீன விபச்சாரி..!!. ".

Thursday, 7 November 2013

உடையக்கூடாது என்ற நெஞ்சு உறுதியுடன்.............கவிதை!

உடையக்கூடாது என்ற
நெஞ்சு உறுதியுடன்
பாறையை
நெருங்குகிக் கொண்டிருக்கிறது
நீர்க்குமிழி..!
-
————————–
-
வழக்கமா கொடுக்கிற அளவு சோறு கொடுத்துட்டு
குழம்பின் அளவை மட்டும் குறைத்திருப்பதன் வாயிலாக
வீட்டுக்காரம்மா ஏதோ சேதி சொல்ல நினைக்கிறாங்கன்னு
மட்டும் புரியுது…!

-
———————————-
-
உண்மையில் பல நேரங்களில் கல்லூரி
ஃபேர்வெல் தினத்தை விட
திருமண நாளே பல நாட்களுக்கு கடைசி நாளாக
அமைந்து விடுகிறது..!
-
——————————–
-
ரயிலில் இருக்குற ஜன்னலோர சீட் மாதிரி வேற எதுவும்
அவ்வளவு காலா காலம் கடந்துகிட்டிருப்பதை
தெரிவிக்கிறதில்லை

Wednesday, 6 November 2013

மனதால்….கவிதை!!




அன்புத் தாயே!
மரணத்தின் கதை கேளாய்…
என்
திரும(ர)ணக் கதை கேளாய்!
வாயைக் கட்டி,
வயிற்றைக் கட்டி,
உதிரம் சிந்தி
உழைத்த உழைப்பெல்லாம்
விழலுக்கு இறைத்த
நீராகி விட்டதம்மா!
ஐந்து காசு பெறாதவனுடன்
அட்சதை தூவி
அனுப்பி வைத்தாய் என்னை
அவன்
ஆண்பிள்ளை என்றதனால்…
அரை லட்சம்
சம்பாதித்தும்,
அடிமை வாழ்வு
வாழ்கிறேன் என்பதை
நீ அறிவாயோ?
மீண்டு வர வழியில்லை
மீட்டெடுக்க யாருமில்லை
மீளா உலகம் – நீ
சென்றதனால்!
உயிருள்ள சடலமா
உலா வருகிறேன்…
மனதால்
மரித்து விட்டதனால்!

Saturday, 2 November 2013

வாழ்க்கையில் விளையாடும் மது!

வேலைக்குப்பின் என்று தொடங்கி
 வேலைக்குமுன் என்றாகும்
 மது !
-
————————-
 -
திறமையை அழித்து
 தீமையைத் தரும்
 மது !
-
———————–
-
விளையாட்டாக ஆரம்பித்து
 வாழ்க்கையில் விளையாடும்
 மது !
-
—————————
-
இலவசம் என்று குடித்தால்
 தன் வசம் ஆக்கிவிடும்
 மது !
-
———————
-
ஊடகங்களில்
 கற்பிக்கப்படும் தீங்கு
 மது !
-
————————
-
நல்லவர்கள் தொடுவதில்லை
 தொட்டவர்களை விடுவதில்லை
 மது !
-
————————
-
இன்பம் என்று தொடங்கி
 பெருந்துன்பத்தில் முடியும்
 மது !
-
——————–
-
துஷ்டனைக் கண்டால்
 தூர விலகு
 மது ! .
-
=====================

Thursday, 31 October 2013

சாளரம்!

சாளரம்

இந்தச்சாளரம்
 
இப்பேருலகின் உட்செல்ல
 
எனக்கான வாசலாயிருக்கிறது
 
மலைகள்தாண்டி விழுகின்ற கதிரவனும்
 
நட்சத்திரங்கள் நிரம்பிய வானமும்
 
இங்கிருந்தே என் கரங்களுக்கு
 
எட்டுவனவாய் இருக்கின்றன

சாரல் சிதறடித்தபடியோ
 
இளவெயிலின் புன்னகையுடனோ
 
என் அத்தியாவசிய முகங்கள்
 
இதன்வழியேதான்
 
 எனதறைக்குள் பிரவேசிக்கின்றன

நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்
 
வியாபாரத்திற்காய் விரைகின்ற
 
பெருங்கூட்டத்தின் தந்திரங்களை
 
இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது

சாலையில் பரபரப்புகள் நிறையும்
 
பாரமான பொழுதுகளில்
 
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
 
தனித்துப்போதலும்கூட இங்கே
 
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு

***********************

காப்புறுதிக்கும் காப்புறுதி!

நாங்க,
திரவியம் தேடப்
போன கதை,
தேடிய திரவியம்
போன கதை
தெரியச் சொல்றேன்
கேளுங்கையா!
பிள்ளைகள் மறந்து
பெற்றோர் துறந்து
பெருசாய் ஒழைச்சோம்
பணத்தைச் செய்ய!
வீட்டை மறந்து
ஒழைச்ச தெல்லாம்
வீணாய்ப் போச்சே
என்ன செய்ய?
சிறுகச் சிறுகச்
சேத்த பணம்
பெருகக் கண்டது
பேதை மனம் – அதப்
பெருக்க நெனச்சது
தப்பு இல்ல! – இப்பப்
பெருவாறாய்
இழந்து நிக்கிது
என்ன செய்ய?
சீட்டுக் கம்பெனியில்
போட்டு வைத்தால்
சீக்கிரம் பணமும்
பெருகுமென்றார்! – அவர்
போட்ட பணத்தைச்
சுருட்டிக் கொண்டு
ஓட்டமெடுத்த
கதையறிவீர்!
பங்குச் சந்தையில்
போட்டுவைத்தால்
பத்தாய் நுìறாய்ப்
பெருகுமென்றார்!
பங்குச்சந்தைகள்
விழுந்து போச்சு!
பாதிப்பு ரொம்பத்தான்
ஆயிப்போச்சு!
நிலையில்லா வாழ்க்கையிலே
நிம்மதியாய் இருப்பதற்கே
வழிமறித்து
வழிசொன்னார் ஒருமுகவர்!
ஆருயிருக்கும் காப்புறுதி
ஆபத்துக்கும் காப்புறுதி
வீட்டின் பேரிலும் காப்புறுதி
விளையும் பொருளுக்கும் காப்புறுதி
பட்டியல் பலவாறாய்ப்
போட்டுக் காட்டி
பாலிசி பலப்பல
எடுக்கச் சொன்னார்!
காப்புறுதிக்கும் காப்புறுதி
கண்டால் எனக்குச்
சொல்லிடுவீர்!
மஞ்சக் கடுதாசி
காட்டி விட்டு
மாயாவியாய்க் கம்பெனிகள்
மறைகின்றன இன்னாளில்!
வங்கியில் போட்டால்
வளரும் என்றார்
வட்டியும் குட்டி
போடு மென்றார்
வட்டி விகிதம்
கொறஞ்சு போச்சு
வாக்கில் நாணயம்
தவறிப் போச்சு!
வங்கியே பத்திரம்
என்பதெல்லாம்
மாறிப்போச்சு
என்ன செய்ய?
வீட்டிலே பெட்டகம்
வாங்கி வச்சு
பூட்டி வைக்கலாம்
பணத்தை என்றால்
பூட்டை உடைக்கும்
திருடன் வந்தால்
பூராப் பணமும்
கொள்ளை போகும்!
வாழ்க்கையைத் தொலைச்சு
பணத்தைத் தேடியது
போதுமையா!
ஓரளவு ஒழைச்சி
ஒசத்தியாய் வாழப்
பழகிகிட்டா
ஒன்னும் பெரிசாத்
தப்பு இல்ல!
மகிழ்ச்சி என்பது
பணத்தில் இல்ல!
அனுவிச்சி வாழ்ந்தா
அது தப்பு இல்ல!
‘அன்பிலே முதலீடு
செய்திருந்தால்
ஆபத்திதுபோல்
வந்திடுமோ?’ – என்று
எண்ணத் துணியுது
இன்று மனம்
தேவைக்கிப் போக
மீதிப்பணம்
ஏழைங்க வாழ
உதவி செஞ்சா
ஏறும் புண்ணியம்
நம் கணக்கில்
ஏறுமா இது
நம் அறிவில்?
***********

பென்சில் நதி!

பென்சில் நதி

நதி பற்றிய கவிதையை
 
நான் எழுதியபோது
 
அருகில் வந்த மகள்
 
வரைந்த நதியைக் காட்டினாள்
 
தாளில் ஓடியது
 
பென்சில் நதி
 
என் கவிதையை
 
அதில் கரைத்துவிட்டு
 
மறுபடி பார்க்க
 
இன்னும் முடியவில்லை
 
எனச் சொல்லியபடியே
 
ஓடிய அவள்
 
கண்களில் மீதி நதி
 
*****************

கல்லா மனிதன் மனம்?

கல்லா மனிதன் மனம்?

ஏதோ நினைவுடன்
 
தனியே நடக்கையில்
 
 ரு கல்லில் கண்டேன்,
 
ஒற்றை இதழுடன் மஞசள் மலர்
 
குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்
 
யார் ஒப்பிட்டது
 
மனிதர் மனத்தைக் கல்லோடு………
 
**********

உன்னோடு இருந்திருப்பேன்…


சுகம் தரும் உலகம் தான்,
 
பல நண்பர்கள் என்னோடு,
 
விரும்பிய நேரமெல்லாம் விளையாட்டு தான்;
 
இருந்தென்ன பயன்
 
உன் சுட்டு விரல் தீண்டலின்றி?
 
தாயே உன் கணினியாய் நானிருந்திருந்தால்
 
உன் ஸ்பரிசமாவது கிடைத்திருக்கும்….
 
**********

Wednesday, 30 October 2013

ஜெ! இருப்பது தற்செயலா?

ஷாம்பு போட்டா குதிரை வாலாகவும், எண்ணெய் வைக்கறப்ப எலி வாலாகவும் மாறும் மல்டிபிள் பர்சானாலிட்டி கொண்டது ….கூந்தல்!
-
—————————————–
-
வடிவேலுவின் புதிய படம் ‘ஜகஜ்ஸால புஜபல தெனாலிமாரன்’
-
# டைட்டில்ல இத்தனை ஜெ இருப்பது தற்செயலா? திட்டமிட்ட சமாதானக் கொடியா..?

——————————————-
 -
மினி பஸ்ஸின் தடங்களுக்கு வருந்துகிறோம்..!
-
#இப்படிக்கு ஆட்டோ ஓட்டுநர்கள்

————————————–
-
வாழ்க்கைன்றது அவ்வை சண்முகி மணிவண்ணன் மாதிரி தெளிய வைத்து அடிக்கும்..!

உண்மை கசக்கும்

ஆம்

அது இப்படித்தான் இருக்கிறது

இறந்து விடுவதை விட

வாழ்ந்து விடலாம் போல

பாடை, மூங்கில்

பூக்கள், விறகு

பானை, புதுத்துணி

சுடுகாட்டுக் கட்டணம்

இத்யாதி, இத்யாதி

இதுவெல்லாம் முடிந்தாலும்

அடுத்தநாள் பாலுக்கு…

பதினாறாம் நாள்

காசு, பணம், துட்டு, மணி

இறந்துபோகவில்லையே என்று

நினைக்கவைக்கும்

ஏராளமான செலவுகள்

ஒரு வகையில் -

உயிரோடு இருப்பதைவிட

செத்துப்போனால்தான்

செலவுகள் அதிகம்!

இறந்தவன் தப்பித்துக்கொள்ள

இருக்கிறவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்

ஆம்

அது அப்படித்தான் இருக்கிறது!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top