.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 27 October 2013

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-06


 குருஷேத்ர போரில் பாண்டவர்களின் படை தளபதிகளுள்  ஒருவரான திருஷ்டகேது சேதி நாட்டை சேர்ந்தவன். மேலும் இவன் சிசுபாலனின் மகன் ஆவான்.



வத்ஷம்:

         இன்றைய உத்திரபிரதேஷ மாநிலத்தின் கோசம் என்ற சிறிய  நகரமே அன்றைய வத்ச நாடு ஆகும். குசம்பி இதன் தலைநகரம்.

        மகாபாரதத்தில் பல இடங்களில் வத்ச பூமி என்று வத்ச நாடு  பற்றி பல குறிப்புகள் வருகின்றன. மகாபாரதம் (I:188) திருச்டதும்ணன் பாஞ்சாலியை பார்த்து அவளை மணக்க காத்திருக்கும் மன்னர்களின் பெயரை வாசிக்கும் பொழுது  ஸ்ருடயு, உலுக, கிட்டவ, சிற்றங்கட மற்றும் சுவங்கட , வத்சராஜா(King of Vatsa Kingdom) என்று குறிப்பிடுகிறான்.


குரு:

      குரு நாடு இன்றைய ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்திரபிரதேஷ பகுதிகளை கொண்டது. ரிக்வேதத்தில் உள்ள குறிப்புகளின் படி சப்த சிந்து (ஏழு நதிகளின் பகுதி) பகுதியில்  முதன் முதலில் ஆரியர்கள் குடியேறினர். ஆரியர்கள் முதலில் குடியேறியது குரு நாடு.

        குரு நாட்டின் தலைநகரம் ஹஸ்தினாபுரம். ஒரு சமயம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் ஹஸ்தினாபுரம் அழிந்ததால் அதன் தலைநகரம் கௌஷம்பிக்கு மாற்றப்பட்டது. இதன் காலம் கி.மு 1200–கி.மு800 என வரையருக்கபடுகிறது .

பாஞ்சாலம்:



            பாஞ்சால நாடு இன்றைய  உத்தர்கந்த், உத்திரபிரதேஷ சில பகுதிகளை கொண்டது. இதன் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டு. பாஞ்சால நாடு வேதகாலத்தில் ஒரு சிறப்பான நாகரிக வளர்ச்சி பெற்றிருந்த நாடாகும். கி.மு 4 ஆம் நூற்றாண்டு அளவில் அது மகத நாட்டுடன் இணைக்கப்பட்டது.


மத்சம்:

       மத்ச நாடு இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரம் ஆகும். இதன் தலைநகரம் விரடநகர (இன்றைய பிராத்). மிக சிறந்த தேசமாக விளங்கிய மத்ஸ்ய ராஜ்ஜியம் புத்தரின் மறைவுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அண்டை நாட்டு மன்னர்களால் கைப்பற்றப்பட்டது

சூரசேனம்:


       கி.மு 6 ஆம் நூற்றாண்டில் மகாஜன்பதங்களில் ஒன்று. இன்றைய உத்திரபிரதேஷ மாநிலத்தின் பராஜ் பகுதியை  கொண்டது. மெதோர இதன் தலைநகரம்.


அஷ்மகம்:


 கி.மு 7 ஆம் நூற்றாண்டில் இருந்த ராஜ்ஜியம். கோதாவரி, மஞ்சிற நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியை கொண்டது. 16 மகாஜனபதன்களுள் இது ஒன்றே தென்இந்திய பகுதியை  கொண்டது. விந்திய மலை பகுதியில் இது அமைந்துள்ளது. இன்றைய நிசாமாபாத், அடிலாபாத் பகுதிகள். வானவியல் அறிஞரான ஆரியபட்டா அஷ்மகம் பகுதியில் பிறந்தவர் என கூறப்படுகிறது.




 


அவந்தி:


         அவந்தி இன்றைய மல்வ பகுதியை சேர்ந்தது. மகாபாரத, விஷ்ணு புராணம், பிரமபுராணம் போன்ற பல நூல்களில் அவந்தி  பற்றிய குறிப்புகள் வருகின்றன. மகாபாரதத்தில் அவந்தி சேர்ந்த மக்கள் மிகவும் பலசாலிகள்(மகாவாலா) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


காந்தாரம்:

         இன்றைய வடக்கு பாகிஸ்தான், கிழக்கு ஆப்கானிஸ்தான்  பகுதியில் காந்தாரம் அமைந்திருந்தது. மிகவும் பழமையான நகரமான இதன் காலம் 15,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். புருஷபுரம் (இன்றைய பெஷாவர்) இதன் முக்கிய நகரமாகும்.

         மகாபாரதத்தில் காந்தாரம் பல இடங்களில் வருகிறது கந்தரி ஹஸ்தினபுரத்தின் அரசரான திருதிராச்டிறரை மணக்கிறாள், மேலும் காந்தரத்தை சேர்ந்த சகுனி பாண்டவர்கள் மீது கொண்ட கோபத்தால் கௌரவர்கள் பக்கம் இருந்து பாண்டவர்களை காட்டுக்கு அனுப்பியது நாம் அறிந்ததே.


 


காம்போஜம்:


             காம்போஜம் 16 மகாஜனபதங்களில் ஒன்று. கிழக்கு காந்தரத்தை ஒட்டி உள்ள பகுதி இது. மகாபாரதத்தின் பல இடங்களில் காம்போஜம் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இங்கு இந்தோ ஈரானிய கலாச்சாரம் வளர்ந்த இடம் ஆகும். தற்போது அங்கு ஈரானிய கலாச்சாரமே பெரும்பாலும் உள்ளது.


மகாஜனபதங்களை தொடர்ந்து ஹிந்து மதத்தின் வேறாக கருதப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை பற்றி அடுத்த பதிவில் காண்போம்...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top