.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 15 October 2013

கணினியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது என்று தெரியுமா?

கணினியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம்(Operating System) என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.


நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான எம்.எஸ். ஆபீஸ்(M.S.Office), பேஜ்மேக்கர்(Pagemaker), கோரல் டிரா(Corel Draw), ஆட்டோகேட்(Autocat) போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம்.


ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.


கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம்(Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை

1. உள்ளீடு/வெளியீடு(Input/ Output).

2. நினைவக(Memory) மேலாண்மை.

3. பணி(Task) மேலாண்மை.

4. பைல்(File) மேலாண்மை.


கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே.
எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.


உங்கள் கணினியில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும்.
நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.


பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும்.   இதனை Multitask என அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. 



ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம்(CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.


நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள்கிறது.


பைலைச் சேமிக்கும் பொழுது அதன் நேரம், தேதி ஆகியவற்றைக் குறிக்கிறது. பைலைப் படிக்க/மட்டும்(Read only), மறைக்க(Hidden), சிஸ்டம் என்ற பண்புகளை(Attributes) பைல்களுக்கு நீங்கள் கொடுக்கும் போது அவற்றை மேற்கொள்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. 


படிக்க/மட்டும் என ஒதுக்கிய பைலில் மாற்றம் செய்ய விடாமல் தடுப்பது, அதே பெயரில் வேறொரு பைலைச் சேமிக்க விடாமல் தடுப்பது எல்லாம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வேலை தான்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top