
ஜெயம் ரவி, தனது அண்ணன் ராஜா இயக்கும் படத்துக்காக உடல் எடையை குறைக்க உள்ளார்.
தற்போது ஜெயம் ரவி பூலோகம், நிமிர்ந்து நில் ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 'பூலோகம்' படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக அவர், தனது உடல் எடையை அதிகரித்து ஜிம் பாய் தோற்றத்துக்கு மாறினார். இதே தோற்றத்துடன் அவர் 'நிமிர்ந்து நில்' படத்திலும் நடித்து வருகிறார்.
இவ்விரு படங்களுக்குப் பிறகு ஜெயம் ரவி அவருடைய அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிப்படாத இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ஆக்ஷனுக்கு நிகராக ரொமான்டிக் காட்சிகளும் இருப்பதால் ஜெயரம் ரவியிடம் எடையை குறைக்குமாறு ராஜா சொல்லியிருக்கிறாராம்.
மேலும் ஜெயம் ரவி தனது பழைய படங்களில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறாராம். இதையடுத்து ஜெயம் ரவி தனது உடல் எடையை 12 கிலோ வரை குறைக்க இருக்கிறார்.
