மொராக்கோவின் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கிவைக்கிறது ‘ராம் லீலா’.
ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 13வது மராக்கெஷ் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் திரையிடுவதற்காக இந்தியாவில் இருந்து பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சர்வதேச திரைப்பட விழா இந்திய சினிமாவை கொண்டாடும் வகையில், விழாவின் தொடக்கமாக ராம் லீலா படம் இடம்பெறுகிறது.
இதன்மூலம் சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை ராம் லீலா பெறுகிறது. திரைப்பட விழாவில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடித்துள்ள ராம் லீலா, நவம்பர் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரோமியோ-ஜூடிவயட் காலகத்திய காட்சிகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கும இப்படத்தின் டிரைலர் மற்றும் தீபிகாவின் நடனம் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.