
தெலுங்கில் ஹிட்டான 'அத்தரின்டிக்கி தாரெடி' படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது.
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்தோடு வசூல் சாதனையும் படைத்த படம் 'அத்தரின்டிக்கி தாரெடி'. இதில் நாயகன், நாயகியாக பவன் கல்யாண், சமந்தா நடித்திருந்திருந்தனர்.
தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதன் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பது உறுதியாகி விட்டதாம். தெலுங்கில் சமந்தா நடித்த வேடத்தில் தமிழிலும் அவரே நடிக்க உள்ளார். இதன்மூலம் அவர் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார். படத்துக்கு இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை.
விஜய் தரப்போ காவலன் படத்தை இயக்கிய சித்திக் இயக்கினால் நன்றாக இருக்கும் என விரும்புகிறதாம். ஆனால் சித்திக்கோ ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் இந்தி படத்தை இயக்க உள்ளார். இதனால் வேறொரு இயக்குனர் இப்படத்தை இயக்கலாம் என கூறப்படுகிறது.
ஏற்கெனவே விஜய் பல தெலுங்கு ரீமேக் படங்களை தமிழுக்கு கொண்டு வந்துள்ளார். அந்த வரிசையில் 'அத்தரின்டிக்கி தாரெடி' படமும் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
